வனத்துறையின் 335 ஏக்கர் நிலம் தனியாருக்கு பதிவு செய்தது எப்படி?

Added : நவ 21, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
தேனி நில அபகரிப்பு வழக்கில், ஸ்ரீவில்லிபுத்துார்- மேகமலை புலிகள் காப்பகத்திற்கு சொந்தமான, 335 ஏக்கர் காப்புகாடு நிலத்தை வகை மாற்றம் செய்து, பத்திரப்பதிவு செய்தவரை நீதிமன்ற உத்தரவு பெற்று கைது செய்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில், 70.61 கோடி ரூபாய் மதிப்புள்ள, 182 ஏக்கர் அரசு நில மோசடியில் ஆர்.டி.ஓ.,க்களாக பணி புரிந்த

தேனி நில அபகரிப்பு வழக்கில், ஸ்ரீவில்லிபுத்துார்- மேகமலை புலிகள் காப்பகத்திற்கு சொந்தமான, 335 ஏக்கர் காப்புகாடு நிலத்தை வகை மாற்றம் செய்து, பத்திரப்பதிவு செய்தவரை நீதிமன்ற உத்தரவு பெற்று கைது செய்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில், 70.61 கோடி ரூபாய் மதிப்புள்ள, 182 ஏக்கர் அரசு நில மோசடியில் ஆர்.டி.ஓ.,க்களாக பணி புரிந்த ஜெயப்பிரதா, ஆனந்தி உட்பட 14 பேர் மீது, 2021 டிச., 25ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. பின், 2022 ஜன., 4ல், 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஏழு பேர் கைதாகி நிபந்தனை ஜாமினில் உள்ளனர்.

நவ., 17ல் பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டு, மஞ்சள்காமாலை பாதிப்பால் நிபந்தனையில் அனுப்பி வைக்கப்பட்டார்.

மண்டல சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறியதாவது:

மாவட்டத்தின் ஆண்டிபட்டி, தேனி, கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம் தாலுகாக்களில் நில அபகரிப்பு பத்திரப் பதிவுகள் நடந்துள்ளன. தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும், 12 சதவீத அரசு புறம்போக்கு நிலங்கள் வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

விசாரணையை தீவிரப்படுத்தினால் இன்னும் பல அரசு அலுவலர்கள் சிக்குவர்.

ஆண்டிபட்டி தாலுகா, வருஷநாடு பகுதியில் ஸ்ரீவில்லிபுத்துார்- மேகமலை புலிகள் காப்பகத்தின் காப்புகாடுகள் உள்ள, 335 ஏக்கர் நிலம், தனி நபருக்கு வகைமாற்றம் செய்து, பதிவு செய்யப்பட்டு, தனியார் எஸ்டேட் ஆக உருமாறி வருகிறது.

அதிகபட்ச அரசியல் அழுத்தத்தால், 'அ' பதிவேடு திருத்தம் செய்து வகைமாற்றம் செய்துள்ளதையும் தாசில்தார் விசாரணையின் போது தெளிவுபடுத்தி உள்ளார்.

இந்த வகை மாற்றம் நடவடிக்கைகள் பற்றி முன்னாள் உயர் அதிகாரி ஒருவருக்கு விபரம் தெரிந்துள்ளது. இந்த 335 ஏக்கரின் தற்போதைய நில மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும்.

இதனால் இவ்விவரங்களை நீதிமன்றத்தில் முறைப்படி அறிக்கை வாயிலாக தெரிவித்து, கலெக்டர் ஒப்புதலில் வனத்துறை நிலத்தை கையகப்படுத்துவோம். அரசு உத்தரவில், தனிநபர் யாராக இருந்தாலும் கைது செய்வோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

-- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
22-நவ-202203:02:24 IST Report Abuse
John Miller எந்த அரசும் அரசியல் மற்றும் அதிகாரி திருடர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்காது சாமி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X