காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி

Added : நவ 21, 2022 | |
Advertisement
பேசின்பாலம் :புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ், 21. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டருகே மது போதையில், நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது, அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 26, என்பவருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜேஷ், தாசின் கன்னத்தில் அறைந்து சென்றார்.இது தொடர்பாக புகார் அளிக்க பேசின்பாலம் காவல் நிலையத்திற்கு சென்ற

பேசின்பாலம் :புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ், 21. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டருகே மது போதையில், நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 26, என்பவருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜேஷ், தாசின் கன்னத்தில் அறைந்து சென்றார்.

இது தொடர்பாக புகார் அளிக்க பேசின்பாலம் காவல் நிலையத்திற்கு சென்ற தாஸ், அங்கிருந்த போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டார். அதற்கு போலீசார், 'நீங்கள் மது போதையில் இருக்கிறீர்கள்; நாளை காலையில் வந்து புகார் செய்யுங்கள்' எனக் கூறினர்.

அடம்பிடித்த தாஸ், போலீசாரை மிரட்ட தன்னிடம் இருந்த பிளேடால் தன்னை தானே கழுத்தை அறுத்துக்கொண்டார். பதறிய போலீசார், அவரை தடுத்து பிளேடை கைப்பற்றினர். இதனால் அவருக்கு சிறிய காயம் மட்டும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாஸ் மீது, அந்த காவல் நிலையத்தில் வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X