வனப்பகுதியில் யானை இறப்பு; அழுது பிளிறிய யானை கூட்டம்

Added : நவ 21, 2022 | |
Advertisement
தென்காசி : தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வனத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 40 வயது பெண் யானை இறந்தது. சக யானைகள் கூடி அழுது பிளிறின.மலைப்பகுதியில் நேற்று முன்தினம் தலையணை அடிவாரத்திற்கு உணவு தேடி யானை கூட்டம் வந்தது. இதில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை கீழே விழுந்தது. யானை அங்கேயே விழுந்து கிடப்பது குறித்து அறிந்த மாவட்ட வன அதிகாரி
 வனப்பகுதியில் யானை இறப்பு; அழுது பிளிறிய யானை கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வனத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 40 வயது பெண் யானை இறந்தது. சக யானைகள் கூடி அழுது பிளிறின.

மலைப்பகுதியில் நேற்று முன்தினம் தலையணை அடிவாரத்திற்கு உணவு தேடி யானை கூட்டம் வந்தது. இதில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை கீழே விழுந்தது. யானை அங்கேயே விழுந்து கிடப்பது குறித்து அறிந்த மாவட்ட வன அதிகாரி முருகன் தலைமையில் ஊழியர்கள் நேற்று முன்தினம் சென்றனர். யானைக்கு உணவு, மருந்துகள் அளித்தனர். இருப்பினும் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.

பின் இரவில் திரும்பினர். நேற்று அதிகாலை சென்ற போது பெண் யானையை சுற்றி சக யானைகள் கூட்டமாக நின்றன. உடல்நலம் பாதித்த யானை இறந்தது தெரிய வந்தது. சக யானைகள் அழுது பிளிறும் சத்தம் வனப்பகுதி முழுவதும் கேட்டது. அதிகாலையில் பனிமூட்டம் குறைந்த பிறகு வனத்துறையினர் அங்கு சென்றனர். சுற்றி நின்ற யானைகள் இறந்த யானை மீது துதிக்கையால் மண்ணை அள்ளிபோட்டு இறுதி சடங்குகள் செய்வது போல செயல்பட்டன. பின் வனத்துறையினர் மற்ற யானைகளை அங்கிருந்து வெளியேற்றினர். இறந்த யானைக்கு உடல் கூராய்வு செய்யப்பட்டது. மண் அள்ளும் இயந்திரம் மூலம் வனத்துறையினர் பெரிய பள்ளம் தோண்டி பெண் யானையை அடக்கம் செய்தனர். யானை இறப்புக்கான காரணத்தை அறிய முடியவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X