வருமான வரி சட்டத்தை ரத்து செய்ய வழக்கு; மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்'

Added : நவ 21, 2022 | |
Advertisement
மதுரை : 'ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி வசூலிக்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் செல்லாது' என, உத்தரவிட கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், குன்னுார் சீனிவாசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தி.மு.க., சொத்து பாதுகாப்புக்குழு

மதுரை : 'ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி வசூலிக்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் செல்லாது' என, உத்தரவிட கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், குன்னுார் சீனிவாசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தி.மு.க., சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ளேன். இந்தியாவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு, கல்வி, வேலைவாய்ப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் செய்தது.

'அது செல்லும்' என, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரை கண்டறிய, 2019ல் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, 8 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ள உயர் வகுப்பினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியதாக கருதப்படும்.

அந்த குடும்பத்திற்கு நகர்ப்புறங்களில், 1,000 சதுர அடிக்கு கீழ் வீடு, விவசாய நிலம், 5 ஏக்கருக்கு கீழ், கிராமப்புறங்களில், 100 சதுர கெஜத்திற்கு கீழ் வீடு இருந்தால் அவை கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி வசூலிப்பதற்கான வருமான வரம்பு நிர்ணயித்து சட்டம் இயற்றப்படுகிறது. 2022ல் வருமான வரி நிர்ணயிப்பதற்கான நிதிச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.

அதன்படி, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதே அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தான்.

அப்படி இருக்கும்போது ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள அனைவரிடமும் வரி வசூலிக்க வகை செய்யும் நிதி சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது.

ஏனெனில், அது சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். இட ஒதுக்கீட்டிற்காக குறிப்பிட்ட பிரிவினரை பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களாக வகைப்படுத்த அரசு முடிவு செய்யும் போது, அதே அளவுகோலை மற்ற அனைத்து பிரிவினருக்கும் பயன்படுத்த வேண்டும்.

ஓ.பி.சி., பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த ஒருவர், 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவராக இருந்தால், வருமான வரி செலுத்த வேண்டும்.

அவர்களுக்கு வீடு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். பலர் தங்கள் பெயரில் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் இல்லாமல் வருமான வரி செலுத்துகின்றனர்.

ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் என்ற அடிப்படையில் ஓ.பி.சி., பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இல்லை.

ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி வசூலிக்க வகை செய்யும் மத்திய அரசின் நிதி சட்டம் செல்லாது என உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை செயலர், நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X