நலச்சங்க மாநாட்டில் 3 பேருக்கு விருது

Added : நவ 21, 2022 | |
Advertisement
குரோம்பேட்டை, அகில இந்திய குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒன்பதாவது மாநாடு, நேற்று முன்தினம் துரைப்பாக்கத்தில் நடந்தது.கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாநாட்டில், குடிநீர், குப்பை, பிளாஸ்டிக் ஒழிப்பு, அடிப்படை தேவைகள்,

குரோம்பேட்டை, அகில இந்திய குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒன்பதாவது மாநாடு, நேற்று முன்தினம் துரைப்பாக்கத்தில் நடந்தது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாநாட்டில், குடிநீர், குப்பை, பிளாஸ்டிக் ஒழிப்பு, அடிப்படை தேவைகள், ஆக்கிரமிப்பு இடம் மீட்பு குறித்து, வல்லுனர்கள் பேசினர்.

இந்த மாநாட்டில், சென்னையில் இருந்து, சிட்லப்பாக்கம் ரைசிங் நலச்சங்கம், குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு மையம், பெசன்ட் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், குரோம்பேட்டை மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தின் தலைவர் மீனாட்சி சுந்தரம், மக்கள் விழிப்புணர்வு மையத்தின் தலைவர் சந்தானம் மற்றும் காமாட்சி சுப்பிரமணியம் ஆகியோருக்கு, சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

மாநாட்டில், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீசன், ஓய்வு பெற்ற கர்னல் டிஜெந்ரா பால் தியாகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X