வெற்றி பெற்ற மாணவர்களை பரிசு வழங்கி பாராட்டிய போலீஸ்

Added : நவ 21, 2022 | |
Advertisement
வால்பாறை;வால்பாறையில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போலீசார் பரிசு வழங்கினர்.வால்பாறை போலீஸ் ஸ்டேஷன் சார்பில், திருஇருதய மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன.பள்ளி தலைமை ஆசிரியர் மோனிகா தலைமையில் நடந்த போட்டியில், மாணவர்கள் வர்ஷா, கவுசல்யா, காவியா

வால்பாறை;வால்பாறையில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போலீசார் பரிசு வழங்கினர்.

வால்பாறை போலீஸ் ஸ்டேஷன் சார்பில், திருஇருதய மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன.

பள்ளி தலைமை ஆசிரியர் மோனிகா தலைமையில் நடந்த போட்டியில், மாணவர்கள் வர்ஷா, கவுசல்யா, காவியா (பேச்சுப்போட்டி); அட்சயா, கீர்த்திகா, திக் ஷனா (கட்டுரைப்போட்டி); ரோகிணி, நிஷாந்தினி, வெற்றிவேல் (ஓவியப்போட்டி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவிகளுக்கு வால்பாறை இன்ஸ்பெக்டர் கற்பகம், சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், தங்கராஜ் ஆகியோர் பரிசு வழங்கினர்.

போலீசார் பேசும்போது, 'மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த இதுபோன்ற போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். படிக்கும் வயதில் மாணவர்கள் தீய பழக்க வழக்கத்துக்கு அடிமையாகக்கூடாது.

'பள்ளியில் செயல்படும் நுாலகத்தை மாணவர்கள் பயன்படுத்தி, பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். வீட்டிலோ, வெளியிடங்களிலோ தவறான நோக்கத்துடன் மாணவிகளை யாராவது தொட்டால், உடனடியாக போலீசில் புகார் கொடுக்க வேண்டும். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க தயங்கக்கூடாது,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X