வேளச்சேரி மால்களில் ஸ்கேனர் பொருத்த அறிவுரை போக்குவரத்து நெரிசலை தீர்க்க போலீசார் திட்டம்

Added : நவ 21, 2022 | |
Advertisement
சென்னை சென்னையின் முக்கிய பகுதியாக வேளச்சேரி உள்ளது. இங்கு, அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு மால்கள், முக்கிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலைகள் உள்ளன. இதனால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.வேளச்சேரி, பீனிக்ஸ் மால் 10 லட்சம் சதுர அடி பரப்பு உடையது. இங்கு, 263 கடைகள், 11 திரையரங்குகள் உள்ளன. 2,525 கார்கள், 3,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி உள்ளது.ஒரு
 வேளச்சேரி மால்களில் ஸ்கேனர் பொருத்த அறிவுரை போக்குவரத்து நெரிசலை தீர்க்க போலீசார் திட்டம்

சென்னை சென்னையின் முக்கிய பகுதியாக வேளச்சேரி உள்ளது. இங்கு, அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு மால்கள், முக்கிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலைகள் உள்ளன. இதனால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

வேளச்சேரி, பீனிக்ஸ் மால் 10 லட்சம் சதுர அடி பரப்பு உடையது. இங்கு, 263 கடைகள், 11 திரையரங்குகள் உள்ளன. 2,525 கார்கள், 3,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி உள்ளது.

ஒரு காருக்கு, மணிக்கு, 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நுழைவாயிலில் இருந்து, 50 அடி துாரத்தில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு உள்ளது.

இதில், கார், பைக் வாகனங்கள், நுழைவு நேரத்தை பதிவு செய்து, அதில் இருந்து, 200 அடி துாரத்தில் உள்ள நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும்.

பிரதான சாலையை ஒட்டி செக்போஸ்ட் அமைத்ததால், மாலுக்கு உள்ளே செல்லும் வாகனங்கள், அனுமதிக்காக பல நிமிடங்கள் காத்திருக்கின்றன. இதனால் ஒரு கி.மீ., துாரம் வரை வரிசைக்கட்டி வாகனங்கள் நிற்கின்றன.

அதேபோல், வேளச்சேரி விஜயநகரில் உள்ள கிராண்ட் மாலிலும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது.

இருந்தும், வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் நெரிசல் ஏற்படுத்தும் வகையில், மால் செல்லும் வாகனங்கள், சாலையில் வரிசை கட்டி நிற்கின்றன.

மால்களுக்கு செல்லும் வாகனங்களால், சாலையில் ஏற்படும் நெரிசலை தடுக்க, வாகன நிறுத்தும் இடத்தில் செக்போஸ்ட் அமைக்க வேண்டும்.

அதேபோல், 'ஸ்கேனர்' அமைக்க வேண்டும் என, மால்கள் நிர்வாகத்தினருக்கு, போக்குவரத்து போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

போக்குவரத்து போலீசார் கூறியதாவது:

பீனிக்ஸ், கிராண்ட் மால்களுக்கு வரும் வாகனங்கள் மற்றும் வெளியேறும் வாகனங்களால், அதிக நெரிசல் ஏற்படுகிறது.

வேளச்சேரி பகுதி மக்கள், நெரிசலால் வெளி இடங்களுக்கு வாகனங்களில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

செக்போஸ்ட் பகுதியில் நேரம் குறிப்பிட, ஒரு வாகனத்திற்கு, ஒரு நிமிடம் வரை ஆகிறது.

ஸ்கேன் செய்தால், 15 நொடிகள் தான் ஆகும். முகப்பு பகுதியில் உள்ள செக்போஸ்டை, நிறுத்தம் பகுதியில் அமைத்து, ஸ்கேனர் பொருத்தி நேரத்தை குறைக்க வேண்டும் என, இரண்டு மால்கள் நிர்வாகத்திற்கும் வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X