திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சிக்கல் குப்பைத்தொட்டிக்கான நிதி நிறுத்தம்

Added : நவ 21, 2022 | |
Advertisement
உடுமலை:திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தில், வீடுகள் தோறும் குப்பைத்தொட்டி வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டதால், திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சி நிர்வாகத்தினர் திணறுகின்றனர்.கடந்த, 2021ல் மாநிலத்தில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி வீடு, கடை, வணிக நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகளை வகை

உடுமலை:திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தில், வீடுகள் தோறும் குப்பைத்தொட்டி வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டதால், திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சி நிர்வாகத்தினர் திணறுகின்றனர்.

கடந்த, 2021ல் மாநிலத்தில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி வீடு, கடை, வணிக நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகளை வகை பிரிக்க வேண்டும்.

அதாவது, மக்கும் மற்றும் மக்காத குப்பையாக வகை பிரித்து, உள்ளாட்சி துாய்மைப்பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.

இதில், மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது, மக்காத பொருட்களை மறுசுழற்சிக்கு அனுப்பி வைப்பது என, உள்ளாட்சி நிர்வாகங்கள் செயல்பட்டு வந்தன.

ஆனால், இத்திட்டம் எதிர்பார்த்த பலன் தராத நிலையில், முனைப்புடன் செயல்படுத்த மாநில அரசு ஊக்குவித்து வருகிறது.

இதற்காக, திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: திட்டம் துவக்கப்பட்ட கால கட்டங்களில் மக்களை ஊக்குவிக்கவும், குப்பையை வகை பிரித்து வழங்கும் பழக்கத்தை ஏற்படுத்தவுமே அரசின் சார்பில், இரு வண்ண குப்பைத்தொட்டிகள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.

உள்ளாட்சி நிர்வாகத்தினரும் தொட்டியை வாங்கி, வீடு தோறும் வழங்கி வந்தனர். தற்போது குப்பைத்தொட்டி கொடுக்க, பிரத்யேக நிதி ஒதுக்கீடு இல்லை. அதை காசு கொடுத்து வாங்க, மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

'திட்டத்தை செயல்படுத்தியாக வேண்டும் என்ற சூழலில், தங்கள் பகுதியில் உள்ள நிறுவனங்களிடம் நன்கொடை பெற்று, குப்பைத்தொட்டி வாங்கி வீடுகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில், உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X