'டிஜிட்டல்' ஆயுள் சான்றிதழ் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு

Added : நவ 21, 2022 | |
Advertisement
தாம்பரம், மத்திய அரசின், ஓய்வு பெற்ற ஊழியர்கள் நலவாழ்வு துறை மற்றும் எஸ்.பி.ஐ., வங்கி சார்பில், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மேற்கு தாம்பரத்தில் நேற்று நடந்தது.இதில், மத்திய அரசின், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை துணை இயக்குனர் மஞ்சுகுப்தா, தலைமை ஆலோசகர் ரமன்ஜித் கவுர், எஸ்.பி.ஐ., வங்கியின் மண்டல மேலாளர் அஸ்வத் துரை
 'டிஜிட்டல்' ஆயுள் சான்றிதழ் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு



தாம்பரம், மத்திய அரசின், ஓய்வு பெற்ற ஊழியர்கள் நலவாழ்வு துறை மற்றும் எஸ்.பி.ஐ., வங்கி சார்பில், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மேற்கு தாம்பரத்தில் நேற்று நடந்தது.

இதில், மத்திய அரசின், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை துணை இயக்குனர் மஞ்சுகுப்தா, தலைமை ஆலோசகர் ரமன்ஜித் கவுர், எஸ்.பி.ஐ., வங்கியின் மண்டல மேலாளர் அஸ்வத் துரை செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஓய்வூதியர்களுக்கு, மொபைல் போன் செயலி மூலம் ஆயுள் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். கூட்டத்தில், மத்திய அரசின் 'வீடு தேடி வங்கி' செயலி குறித்தும் விளக்கப்பட்டது.

எப்படி பதிவது?

கூகுள் பிளே ஸ்டோரில், https://jeevanpramaan.gov.in/package/download என்ற 'ஜீவன் பிரம்மன்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதில், தங்களது விபரங்களை பதிவு செய்தால், மின்னஞ்சலுக்கு ஒரு குறியீடு எண் வரும்.அந்த குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்து சமர்ப்பித்த பின், மொபைல் போனில் விபரங்கள் வரும். அதை சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து, 'ஆதார் பேஸ் ரீட்' செயலியில் மொபைல் போன் கேமராவில் புகைப்படம் எடுத்து அனுப்பியதும், ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்ட தகவல், குறுஞ்செய்தியாக வரும். ஓய்வு பெற்ற ஊழியர்கள், தங்களது இருப்பிடத்தில் இருந்தே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X