குன்றத்துார் :வள்ளலாரின் 200வது பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டு முழுவதும், 365 நாட்களும், கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம், ஹிந்து அறநிலையத் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, குன்றத்துார் சுப்பிரமணி சுவாமி கோவில் சார்பில், தனியார் திருமண மண்டபத்தில், இரண்டு நாட்கள் அன்னதானம் நடக்கிறது.
முதல் நாளான நேற்று, வள்ளலார் சிலைக்கு மாலை அணிவித்து, சிறப்பு பாடல்கள் பாடி, அன்னதானம் வழங்கப்பட்டது. அமைச்சர் அன்பரசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.