சொகுசு கார் மோதி பால் வியாபாரி பலி

Added : நவ 21, 2022 | |
Advertisement
மீனம்பாக்கம் :சென்னை, மீனம்பாக்கம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 63. மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று அதிகாலை, பால் கறப்பதற்காக 'டி.வி.எஸ்., 50' இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து பழவந்தாங்கல் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, ஜி.எஸ்.டி., சாலை சிக்னல் அருகே அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ., கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ

மீனம்பாக்கம் :சென்னை, மீனம்பாக்கம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 63. மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று அதிகாலை, பால் கறப்பதற்காக 'டி.வி.எஸ்., 50' இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து பழவந்தாங்கல் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, ஜி.எஸ்.டி., சாலை சிக்னல் அருகே அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ., கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து மவுன்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுனரான ஈரோட்டைச் சேர்ந்த ஹாரிஸ் சோனு, 27, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X