பள்ளிக்கரணை :சென்னை, பள்ளிக்கரணை அடுத்த சேலையூரில் ஆல்வின் தனியார் பள்ளி உள்ளது. பள்ளி முடிந்ததும், மாணவ மாணவியர் பள்ளி பேருந்தில் புறப்பட்டனர். நேற்று மாலை சித்தாலபாக்கத்தில், பள்ளி பேருந்தில் இருந்து மாணவர்கள் இறங்கினர்.
அப்போது தி.நகரில் இருந்து, கொளப்பாக்கம் நோக்கி சென்ற 'தடம் எண்: எம் ௫௧ வி' என்ற மாநகர பேருந்து, பள்ளி பேருந்தின் பின் பக்கம் வேகமாக மோதியது. பள்ளி பேருந்தில் இருந்த மாணவ, மாணவியர் பீதி அடைந்து அலறினர். இந்த விபத்தில், பள்ளி மாணவர்கள் ஏழு பேர் லேசான காயம் அடைந்தனர். அரசு பேருந்தின் ஓட்டுனர் காசிநாதன், 43, பலத்த காயம் அடைந்தார்.
கிரேன் உதவியுடன் அரசு பேருந்து மீட்கப்பட்டது. அரசு பேருந்து ஓட்டுனர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பள்ளிக்கரணை போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
Advertisement