சென்னை, சென்னை, பாரிமுனையில் நடந்த ஒய்.எம்.சி.ஏ., மாநில டேபிள் டென்னிஸ் போட்டியில், 60 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், ஒற்றையர் பிரிவில், சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த எத்திராஜன் காலிறுதிப் போட்டியில், அந்தோணி ரவி என்ற வீரரை 2:0 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார்.
அரையிறுதிப் போட்டியில் சாமிநாதன் என்ற வீரரை 3:0; இறுதிப் போட்டியில், பிரேம்குமார் என்ற வீரரை 3:2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை பெற்றார்.
அதேபோல் இரட்டையர் போட்டியில், எத்திராஜன் - பிரேம்குமார் ஜோடி, வேலாயுதம் - லட்சுமி நரசிம்மன் ஜோடியை 3:0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இரட்டை வெற்றி பெற்ற எத்திராஜனுக்கு, வழக்கறிஞர் ராஜசேகர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.