டிவி ஷ ன் ஹாக்கி 'லீக்' சாம்பியன்ஷிப் வேளச்சேரி கிளப் அணி அசத்தல்

Added : நவ 21, 2022 | |
Advertisement
சென்னை, சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்து வருகின்றன.இப்போட்டியில், தமிழக தபால் அணி, ரிசர்வ் வங்கி, மின் வாரியம் என, கிளப் மற்றும் அகாடமிகளைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றுள்ளன.அந்த வகையில், நேற்று முன்தினம் மாலை நடந்த போட்டியில், பிரண்ட்ஸ் ஹாக்கி கிளப்

சென்னை, சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்து வருகின்றன.

இப்போட்டியில், தமிழக தபால் அணி, ரிசர்வ் வங்கி, மின் வாரியம் என, கிளப் மற்றும் அகாடமிகளைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றுள்ளன.

அந்த வகையில், நேற்று முன்தினம் மாலை நடந்த போட்டியில், பிரண்ட்ஸ் ஹாக்கி கிளப் மற்றும் அடையார் யங்ஸ்டர்ஸ் அணிகள் மோதின.

போட்டி துவங்கிய நான்காவது நிமிடத்திலேயே பிரண்ட்ஸ் அணியின் வீரர் திவாகர் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து, அதே அணியினர் 13 மற்றும் 19வது நிமிடங்களில் இரண்டு கோல் அடித்து, 3 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் நின்றனர்.

போட்டியில், முதல் பாதி முடிவான, 25வது நிமிடத்தில், அடையார் அணியின் வீரர் கோகுல் ஒரு கோல் அடித்து அணிக்கு ஆறுதல் கொடுத்தார்.

விறுவிறுப்பான இரண்டாவது பாதியிலும், பிரண்ட்ஸ் அணியினர் அதிரடியாக விளையாடி, 19வது மற்றும் 37வது நிமிடங்களில் இரண்டு கோல் அடித்தனர். முடிவில், 6 - 2 என்ற கோல் கணக்கில் பிரண்ட்ஸ் ஹாக்கி கிளப் அணி வெற்றி பெற்றது.

நேற்று நடந்த போட்டியில், யாசின் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் வேளச்சேரி ஹாக்கி கிளப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அதில், வேளச்சேரி கிளப் அணியினர், துவக்கத்தில் இருந்தே புள்ளிகளை குவித்தனர். முடிவில், 7 - 1 என்ற கோல் கணக்கில், வேளச்சேரி அணி வெற்றி பெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X