மூன்று 'சீப் பிளானர்'கள் சி.எம்.டி.ஏ.,வில் நியமனம்

Added : நவ 21, 2022 | |
Advertisement
சென்னை, சி.எம்.டி.ஏ.,வில் தொழில்நுட்ப ரீதியாக உயர் நிலையில் சீப் பிளானர் பதவி உள்ளது. தற்போதைய நிலையில், ஆறு சீப் பிளானர் பதவியிடங்கள் உள்ளன.இதில், மூன்று இடங்கள் காலியாக இருப்பதால், சீனியர் பிளானர்களில் இருந்து மூன்று பேரை, பதவி உயர்வு வாயிலாக சீப் பிளானர்களாக நியமிக்க, அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதன் அடிப்படையில், மூன்று பேரை சீப் பிளானர்களாக நியமிக்க, தமிழக அரசு


சென்னை, சி.எம்.டி.ஏ.,வில் தொழில்நுட்ப ரீதியாக உயர் நிலையில் சீப் பிளானர் பதவி உள்ளது. தற்போதைய நிலையில், ஆறு சீப் பிளானர் பதவியிடங்கள் உள்ளன.

இதில், மூன்று இடங்கள் காலியாக இருப்பதால், சீனியர் பிளானர்களில் இருந்து மூன்று பேரை, பதவி உயர்வு வாயிலாக சீப் பிளானர்களாக நியமிக்க, அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதன் அடிப்படையில், மூன்று பேரை சீப் பிளானர்களாக நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி மறு ஆய்வு, மேல் முறையீடு, மனை வரன்முறை பிரிவு சீனியர் பிளானராக உள்ள ருத்ரமூர்த்தி, பரப்பு வளர்ச்சி பிரிவு சீப் பிளானராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கப் பிரிவு சீனியர் பிளானராக இருந்த ரவிக்குமார், விரிவான வளர்ச்சித் திட்ட பிரிவு சீப் பிளானராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பரப்பு திட்ட பிரிவில் அதிக உயரமில்லாத கட்டடங்கள் பிரிவு சீனியர் பிளானராக இருந்த பாலசுப்ரமணியன், பரப்பு திட்ட பிரிவுக்கான சீப் பிளானராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் ஹிதேஷ் குமார் மக்வானா பிறப்பித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X