பா.ஜ., கட்சி பொறுப்புகளில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் 'சஸ்பெண்ட்'

Updated : நவ 22, 2022 | Added : நவ 22, 2022 | கருத்துகள் (49) | |
Advertisement
சென்னை: நடிகை காயத்ரி ரகுராம் அடுத்த 6 மாதம் பா.ஜ., கட்சியின் அனைத்துவித பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். வெளிநாடு வாழ் மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு
பா.ஜ., கட்சி பொறுப்புகளில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் 'சஸ்பெண்ட்'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: நடிகை காயத்ரி ரகுராம் அடுத்த 6 மாதம் பா.ஜ., கட்சியின் அனைத்துவித பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

வெளிநாடு வாழ் மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.



அண்ணாமலை உத்தரவால் பாஜவில் பரபரப்பு


நாட்டிற்காக உழைப்பேன்


இது தொடர்பாக காயத்ரி ரகுராம் வெளியிட்ட அறிக்கையில், கட்சியில் இருந்து நீக்கியதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. சஸ்பெண்ட்டுடன் தேசத்திற்காக உழைப்பேன் எனக்கூறியுள்ளார்.



தடை

அண்ணாமலை வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும், ஓபிசி அணி மாநில பொது செயலாளர் சூர்யா சிவா இடையே நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து விசாரித்து அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க, ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் கூறப்பட்டுள்ளது.


அறிக்கை சமர்ப்பிக்கும் வரை ஓபிசி அணியின் மாநில பொது செயலாளர் சூரியா சிவா, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (49)

sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
25-நவ-202218:31:09 IST Report Abuse
sankaranarayanan நடிகை காயத்ரி ரகுராம் எந்த பிரிவின் மாநில தலைவர் பதவியில் இருந்தாலும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி கூறும்போது கொஞ்சம் நாவடக்கம் தேவை. கட்சித்தலைவரை அண்ணாமலை அண்ணாமலை என்றே கூறுவது எல்லோருக்குமே முகம் சுளிக்க வைக்கிறது. எதிர்கட்சிகளையாவது பார்த்து மரியாதை என்பது சற்றே தெரிந்துகொள்ள வேண்டும். தலைவர் அண்ணாமலை அல்லது அன்னான் அண்ணாமலை அல்லது தமிழக பிரசிடெண்டு என்று பல வார்த்தைகளில் ஒன்றையாவது பயன் படுத்தினால் நாகரிகமாகும் இல்லையேல் இது கட்சியையே பெரிதும் பாதிக்கும். முதலில் மற்றர்களுக்கு மரியாதை தருவது என்ற பழக்கம் இதை இனிமேலாவது பின்பற்றுவாரா?
Rate this:
Cancel
john - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-நவ-202210:23:15 IST Report Abuse
john அண்ணாமலைக்கு வந்த சோதனையா, இனி சொந்த கட்சி பிரச்சனையை சமாளிக்கவே நேரம் சரியாகிவிடும் போலிருக்கே....
Rate this:
Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
25-நவ-202212:39:20 IST Report Abuse
Senthooraமற்ற காட்சிகளை குறை சொல்ல தினம், தினம் ரூம் போட்டு யோசிக்கிறார், பிறகு எப்படிங்க கட்சி நடத்த முடியும்....
Rate this:
Cancel
Krishnan - Bengaluru,இந்தியா
23-நவ-202207:35:13 IST Report Abuse
Krishnan பிஜேபி கட்சியில் கட்சியின் கொள்கை, கட்சித்தலைவரின் ஆணையை மதித்து நடக்காத உறுப்பினர்களை உடனுக்குடன் அண்ணாமலையின் கடும் நடவடிக்கை எடுத்து கட்சியின் கொள்கையை எப்படி ஜெயலலிதா தனது கட்சியை நிலைநாட்டி வந்தாரோ அதேபோல் செய்துவருகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X