புட்டபர்த்தி: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நேபாள இளைஞர் பயிற்சி முகாம் நிறைவு மற்றும் இசைக்கலைஞர் பண்டிட் ரோணு மஜூம்தர் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபாவின் 97 வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், 4வது நாளில், நேபாள ஸ்ரீசத்யசாய் சேவா அமைப்பின் இளைஞர் அணியினரின் பாடல் நிகழ்ச்சி நடந்தது.

இதன் பிறகு, ஸ்ரீசத்ய சாய் இளைஞர் மேம்பாடு மற்றும் ஸ்ரீசத்ய சாய் ஒருங்கிணைந்த ஆளுமை மேம்பாட்டு திட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதன் மூலம், சத்யசாய்பாபாவின் இடத்தில் இருந்ததற்காக, நேபாள இளைஞர்களுக்கு சத்யபாபாவின் முழு ஆசி கிடைத்தது.பாடல்கள் பாடிய நேபாள இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதன் பின், வாரணாசியை சேர்ந்த புல்லாங்குழல் இசைக்கலைஞர் ரோனு மஜூம்தாரின் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி நடந்தது. அவருடன், பல்துறை கலைஞரான அவரது மகன் சித்தார்த் மஜூம்தார் பங்கேற்றார். ரோனு மஜூம்தாரின் மென்மையான குரலில் பல பஜனை பாடல்களை பாடி, சத்யசாயின் பொற்பாதங்களில் சமர்ப்பித்தார்.
அப்போது, அங்கிருந்தவர்கள், பலத்த கரகோஷம் எழுப்பி தந்தை, மகனை உற்சாகப்படுத்தினர். இவர்களுடன் இணைந்து நிஷிகாந்த் பரோடேகர் தபேலா வாசித்தார்.

முன்னதாக, நேபாள சாய் அமைப்பினரின் இளைஞர் சான்றிதழ் திட்டத்துடன் நிகழ்ச்சி நடந்தது. நேபாள ஸ்ரீசத்யசாய் கல்வி அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் பங்கேற்று, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை சத்யசாய் குளோபல் கவுன்சில் மற்றும் ஸ்ரீசத்ய சாய் மத்திய அறக்கட்டளை உயர் அதிகாரிகள் வழங்கினர்.

பஜனைகளை தொடர்ந்து மங்கள ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
