உதவி பேராசிரியர் தேர்வு: ஐகோர்ட்டில் மேல்முறையீடு

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை:பச்சையப்பா அறக்கட்டளை கல்லுாரிகளில், 254 உதவி பேராசிரியர்கள் தேர்வு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 2013 முதல் 2015ம் ஆண்டுகளில், பச்சையப்பா அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லுாரிகளில், 254 உதவி பேராசிரியர்கள் தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்

சென்னை:பச்சையப்பா அறக்கட்டளை கல்லுாரிகளில், 254 உதவி பேராசிரியர்கள் தேர்வு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2013 முதல் 2015ம் ஆண்டுகளில், பச்சையப்பா அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லுாரிகளில், 254 உதவி பேராசிரியர்கள் தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.

இதுகுறித்து, கல்லுாரி கல்வி இயக்குனர் விசாரித்து, அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். அதன்படி, அறிக்கை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, '254 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு மற்றும் நியமனம் செல்லாது' என, நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, உதவி பேராசிரியர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் பரேஷ் உபாத்யாயா, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பின், பணிக்கு அனுமதிப்பதில்லை என்றும், வருகைப் பதிவேடு கல்லுாரிகளின் முதல்வர் அறைக்கு எடுத்து செல்லப்படுவதாகவும், உதவிப் பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, அறக்கட்டளை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இன்றி, மேல்முறையீட்டு வழக்குக்கு எண் வழங்க, பதிவுத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உதவி பேராசிரியர்கள் வருவதை தடுக்கவில்லை என்பது குறித்து, கல்லுாரி முதல்வர்கள் தரப்பில் விளக்க அறிக்கையும், 'கேமரா' பதிவு இருந்தால் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி, விசாரணையை, இன்றைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X