மரக்காணம்:கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன் குப்பம் கடலில் அலையின் சீற்றம் அதிகரித்துள்ள நிலையிலும், வெளிநாட்டவர் சறுக்கு விளையாடியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் பகுதியில் கடல் அலையின் சீற்றம் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் உள்ளது.
ஆபத்தை உணராமல் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் கடல் அலையில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள், 'இப்பகுதியில் தொடர்ந்து கடல் சார்ந்த விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன.
இது போன்ற நேரங்களில் கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபடக்கூடாது' என வெளிநாட்டவர்களிடம் கூறியுள்ளனார்.
ஆனால், அதை அவர்கள் கண்டுகொள்ளாமல் கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.