கலைத் திருவிழா போட்டிகளில் புறக்கணிப்பு: ஆசிரியர்கள் அதிருப்தி ஆசிரியர்கள் அதிருப்தி

Added : நவ 22, 2022 | |
Advertisement
மதுரை:கல்வித்துறை நடத்தும் கலைத்திருவிழாவில் தொடக்கப் பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வருவது, கல்வி செயல்பாடுகளில் கலைப் பண்பாட்டுக் கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பது போன்ற நோக்கத்திற்காக, கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா நடத்தப்படும் என சட்டசபையில் முதல்வர்

மதுரை:கல்வித்துறை நடத்தும் கலைத்திருவிழாவில் தொடக்கப் பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வருவது, கல்வி செயல்பாடுகளில் கலைப் பண்பாட்டுக் கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பது போன்ற நோக்கத்திற்காக, கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா நடத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி ஆறு - எட்டு, ஒன்பது - பத்து, பிளஸ் 1 - பிளஸ் 2 என மூன்று பிரிவுகளில் கலை சார்ந்த பயிற்சிகள், போட்டிகள் நாளை முதல் துவங்குகின்றன.

வட்டார, மாவட்ட, மாநில அளவில் வரும் ஜன., 9 வரை போட்டிகள் நடக்கின்றன. வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் 'கலையரசன்', மாணவியருக்கு 'கலையரசி' பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இத்திருவிழாவில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பங்கேற்க இயலாது. இது தொடர்பாக

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் பாரதி சிங்கம் கூறியதாவது:

கலைத்திருவிழாவில் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர 40க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது.

ஆனால், இதில் தொடக்கப் பள்ளிகளையும் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களையாவது சேர்த்து அவர்கள் வயதுக்கேற்ற போட்டிகளை அறிவித்திருக்கலாம்.

தொடக்கப் பள்ளிகளில் இருந்தே அவர்களின் திறமையை வெளிக்கொண்டுவருவது தான் சிறப்பாக இருக்கும். இதற்கு முன் பல போட்டிகளில் இப்பள்ளிகளையும் சேர்த்தே தான் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X