அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு ஒரே சுக பிரசவத்தில் 3 குழந்தைகள்

Added : நவ 22, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சுக பிரசவத்தில் அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண், குழந்தைகளுடன் நலமுடன் உள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 29; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுபலட்சுமி, 23. இவர்களுக்கு, ரித்திக் என்ற 3 வயது மகன் உள்ளார்.மீண்டும்
 அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு ஒரே சுக பிரசவத்தில் 3 குழந்தைகள்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சுக பிரசவத்தில் அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண், குழந்தைகளுடன் நலமுடன் உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 29; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுபலட்சுமி, 23. இவர்களுக்கு, ரித்திக் என்ற 3 வயது மகன் உள்ளார்.

மீண்டும் கர்ப்படைந்த சுபலட்சுமி, மூங்கில் துறைப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சையின் போது, சுபலட்சுமி தனியார் மையத்தில் 'ஸ்கேன்' எடுத்தார். அதில், கருவில் மூன்று குழந்தைகள் வளர்ந்தது தெரிந்தது.

மேலும், அவருக்கு குழந்தை பிரசவ நாளாக, டிச., 2ம் தேதி என மருத்துவர்கள் குறிப்பிட்டனர். ஆனால், ஒரு மாதம் முன்கூட்டியே நவ., 2ம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அன்று பகல் 2:30 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அன்று மாலை 4:20 மணி, 4:22 மணி மற்றும் 4:24 மணிக்கு அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகள் சுக பிரசவத்தில் பிறந்தன.

இதில், இரு குழந்தைகளின் எடை தலா 1.200 கிலோ; மற்றொரு குழந்தையின் எடை 960 கிராம் இருந்தது. இதனால், 19 நாட்களுக்கு முன் குழந்தைகள் பிறந்த பிறகும், அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

தற்போது தாய், சேய் நலமுடன் உள்ளனர். குழந்தைகள், எடை குறைவாக இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.


அரசு உதவி கோரும் தாய்



இது தொடர்பாக சுபலட்சுமி கூறியதாவது:

பிளஸ் 1 வரை படித்துள்ள நான், கூலி வேலை செய்கிறேன். என் கணவரும் பெங்களூருவில் கூலி வேலை செய்கிறார். எங்களுக்கு ஏற்கனவே மகன் உள்ளார்.

தற்போது ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளது சந்தோஷமாக உள்ளது. குழந்தைகளை சந்தோஷமாக வளர்த்து ஆளாக்குவேன்.

இருப்பினும், குடும்பத்தில் நிலவும் வறுமையை நினைக்கும்போது பதற்றமாக உள்ளது. அரசு சார்பில் நிதியுதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X