திருமணத்திற்கு வரும்படி ராணுவத்துக்கு அழைப்பு

Added : நவ 22, 2022 | |
Advertisement
கேரளாவைச் சேர்ந்த ஒரு ஜோடி, இந்திய ராணுவத்திற்கு திருமண அழைப்பிதழை அனுப்பி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். கேரளாவில் வசிக்கும் கார்த்திகா -ராகுல் ஜோடி, தங்களது திருமண அழைப்பிதழை இந்திய ராணுவத்திற்கு அனுப்பியுள்ளனர். மேலும் ராணுவ வீரர்களுக்கு ஒரு சிறப்பு குறிப்பையும் அத்துடன் இணைத்துள்ளனர். அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:அன்புள்ள வீரர்களே, நாங்கள் நவ., 10ம்

கேரளாவைச் சேர்ந்த ஒரு ஜோடி, இந்திய ராணுவத்திற்கு திருமண அழைப்பிதழை அனுப்பி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

கேரளாவில் வசிக்கும் கார்த்திகா -ராகுல் ஜோடி, தங்களது திருமண அழைப்பிதழை இந்திய ராணுவத்திற்கு அனுப்பியுள்ளனர். மேலும் ராணுவ வீரர்களுக்கு ஒரு சிறப்பு குறிப்பையும் அத்துடன் இணைத்துள்ளனர். அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:

அன்புள்ள வீரர்களே, நாங்கள் நவ., 10ம் தேதி திருமணம் செய்து கொள்கிறோம். எங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உங்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். உங்களால் தான், நாங்கள் நிம்மதியாக தூங்குகிறோம்.

எங்கள் திருமண நாளில் உங்களை அழைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் வருகையையும், ஆசீர்வாதத்தையும் விரும்புகிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அழைப்பை இந்திய ராணுவம் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும், திருமணம் முடிக்கவுள்ள ஜோடிக்கு பதிலளித்து, 'திருமண அழைப்பிற்காக இந்திய ராணுவம் ராகுல் மற்றும் கார்த்திகாவுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது. இருவருக்கும் மகிழ்ச்சியான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறோம்' என, குறிப்பிட்டுள்ளனர்.


- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X