ஆப்பரேஷன் செய்த தொழிலாளி பலி தனியார் மருத்துவமனை முற்றுகை

Added : நவ 22, 2022 | |
Advertisement
கடலுார்:தனியார் மருத்துவமனையில் மூக்கில் ஆப்பரேஷன் செய்து கொண்ட கூலித் தொழிலாளி இறந்தார். டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அவரது மனைவி அளித்த புகாரின் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் கோபால் மகன் கோவிந்தராசு, 30; கூலித் தொழிலாளி. இவர், கடுமையான சளி தொந்தரவு காரணமாக, இரண்டு நாட்களுக்கு

கடலுார்:தனியார் மருத்துவமனையில் மூக்கில் ஆப்பரேஷன் செய்து கொண்ட கூலித் தொழிலாளி இறந்தார்.

டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அவரது மனைவி அளித்த புகாரின் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் கோபால் மகன் கோவிந்தராசு, 30; கூலித் தொழிலாளி.

இவர், கடுமையான சளி தொந்தரவு காரணமாக, இரண்டு நாட்களுக்கு முன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பின், சிகிச்சை அளித்த டாக்டர்களின் பரிந்துரையின் படி, நேற்று முன்தினம் காலை, மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார்.

கோவிந்தராசுவை பரிசோதித்த டாக்டர், மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு, கோவிந்தராசுவின் மனைவி செண்பகம், 25, உள்ளிட்ட உறவினர்கள் ஒப்புக்கொண்டனர்.

அன்று மாலை, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆப்பரேஷன் செய்தபோது பாதியிலேயே கோவிந்தராசுவை ஆம்புலன்சில் ஏற்றி, நெல்லிக்குப்பத்தில் உள்ள இன்னொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

அரை மணி நேரத்தில் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக, இரண்டு தனியார் மருத்துவமனைகளின் டாக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, கோவிந்தராசுவின் மனைவி செண்பகம் புகார் அளித்தார்.

கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர். மேலும், தனியார் மருத்துவமனை எதிரே கோவிந்தராசுவின் உறவினர்கள் திரண்டதால், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X