சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து செய்தது 'வாபஸ்'

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை:தனியார் பள்ளி தாளாளரான சிவசங்கர் பாபாவுக்கு எதிரான, பாலியல் துன்புறுத்தல் வழக்கை, ரத்து செய்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் உறைவிடப் பள்ளி தாளாளராக இருப்பவர் சிவசங்கர் பாபா. இந்த பள்ளியில், 2010, 2011ம் ஆண்டுகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்ததாக, 2021 ஆகஸ்டில், மாணவனின் தாய் அளித்த

சென்னை:தனியார் பள்ளி தாளாளரான சிவசங்கர் பாபாவுக்கு எதிரான, பாலியல் துன்புறுத்தல் வழக்கை, ரத்து செய்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் உறைவிடப் பள்ளி தாளாளராக இருப்பவர் சிவசங்கர் பாபா. இந்த பள்ளியில், 2010, 2011ம் ஆண்டுகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்ததாக, 2021 ஆகஸ்டில், மாணவனின் தாய் அளித்த புகாரில், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, 'புகார் தாக்கல் செய்யும்போது, தாமதத்தை ஏற்கக் கோரி மனுத் தாக்கல் செய்யவில்லை.

'குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை என்றாலும், புகார் உடன் தாமதத்தை ஏற்கக் கோரி மனுத் தாக்கல் செய்யாததால், இந்த வழக்குக்கான காலவரம்பு முடிந்து விட்டது. எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை, திரும்பப் பெறக் கோரி, சி.பி.சி.ஐ.டி., மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், நீதிபதி மஞ்சுளா முன், விசாரணைக்கு வந்தன. வழக்கை ரத்து செய்த உத்தரவை, திரும்பப் பெறக் கூடாது என, சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

சி.பி.சி.ஐ.டி., தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''இவ்வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. புகார் அளித்தவர் தரப்பை கேட்கவில்லை. எனவே, வழக்கு ரத்து உத்தரவை, திரும்பப் பெற வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, வழக்கை ரத்து செய்த உத்தரவை, திரும்ப பெறுவதாக நீதிபதி தெரிவித்தார். சிவசங்கர் பாபா மனுவின் விசாரணையை, வரும் 29ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X