பயங்கரவாத செயல்களுக்கு பயன்படும் திருட்டு வாகனங்கள் ஹிந்து முன்னணி தலைவர் 'அலெர்ட்'

Added : நவ 22, 2022 | |
Advertisement
உடுமலை:''பயங்கரவாத செயல்களின் போது பயன்படுத்த ஏராளமான வாகனங்கள் திருடப்பட்டும், மோசடியாக பறிக்கப்பட்டும் வருகின்றன,'' என, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.இது குறித்து, திருப்பூர் மாவட்டம், உடுமலையில் ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தின் பெருமை, கலாசாரம், நாட்டின் ஒற்றுமையை
 பயங்கரவாத செயல்களுக்கு பயன்படும் திருட்டு வாகனங்கள் ஹிந்து முன்னணி தலைவர்  'அலெர்ட்'

உடுமலை:''பயங்கரவாத செயல்களின் போது பயன்படுத்த ஏராளமான வாகனங்கள் திருடப்பட்டும், மோசடியாக பறிக்கப்பட்டும் வருகின்றன,'' என, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.

இது குறித்து, திருப்பூர் மாவட்டம், உடுமலையில் ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் பெருமை, கலாசாரம், நாட்டின் ஒற்றுமையை சிறப்பிக்கும் வகையில், காசியில் தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

ஹிந்து முன்னணி எச்சரிக்கை விடுத்தும், உளவுத்துறை கண்டு கொள்ளாததால் கோவையில் சிலிண்டர் குண்டு வெடிப்பு நடந்தது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று முன்தினம் குக்கர் குண்டு வெடித்துள்ளது. இதில், ஈடுபட்ட முகமது ஷாரிக், கோவை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வந்து சென்றுள்ளார்.

கோவையில் கார் வாங்கி கொடுத்தவரை கைது செய்த போலீசார், அவரை 'கஸ்டடி'யில் எடுத்து விசாரிக்கவில்லை.

கோவை, உடுமலை பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த ஏராளமான வாகனங்கள் திருடப்பட்டும், மோசடியாக பறிக்கப்பட்டும் வருகின்றன.

இதனால், இன்னும் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கும் ஆபத்து உள்ளது. வாகனத்திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X