தவறான சிகிச்சை அளித்ததால் ரூ.3.6 லட்சம் இழப்பீடு உத்தரவு

Added : நவ 22, 2022 | |
Advertisement
புதுச்சேரி:தவறான மருத்துவ சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் 3.6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க புதுச்சேரி மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஓங்கூரைச் சேர்ந்தவர் இந்திராணி, 62; இவர், 2011ம் ஆண்டு வீட்டில் தவறி விழுந்ததில், முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார்

புதுச்சேரி:தவறான மருத்துவ சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் 3.6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க புதுச்சேரி மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஓங்கூரைச் சேர்ந்தவர் இந்திராணி, 62; இவர், 2011ம் ஆண்டு வீட்டில் தவறி விழுந்ததில், முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார்.

அங்கு அவருக்கு, 'வெர்டிபிரோபிளாஸ்டி' அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை தவறாக செய்ததால், இந்திராணிக்கு இடுப்புக்கு கீழே உணர்ச்சி இழந்து கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையானார்.

இதையடுத்து, இந்திராணி இழப்பீடு கோரி தனக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மற்றும் மருத்துவமனை மீது புதுச்சேரி மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2014ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்திராணி 2018ம் ஆண்டு இறந்தார். அவரது வாரிசுதாரர்கள் வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் பொங்கியப்பன், உறுப்பினர்கள் சுந்தரவடிவேலு, உமாசங்கரி ஆகியோர், தவறான சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் மருத்துவமனை நிர்வாகமும், இந்திராணியின் வாரிசுகளுக்கு இழப்பீடாக 3.6 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X