பெருகும் வரவேற்பு;- பதறும் தி.மு.க.,

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை:காசி தமிழ்ச் சங்கமத்திற்கு, தமிழக மக்களிடையே கிடைத்து வரும் வரவேற்பு, தி.மு.க.,வினரை பதற்றமடையச் செய்துள்ளது.காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான தொன்மையான ஆன்மிக, கலாசார பிணைப்பை மீட்டெடுக்கவும், மக்களிடம் ஆன்மிக, தேசிய உணர்வை வளர்க்கவும், இம்மாதம் 17 முதல் டிசம்பர் 16 வரை, ஒரு மாத கால 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சிக்கு, மத்திய பா.ஜ., அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை:காசி தமிழ்ச் சங்கமத்திற்கு, தமிழக மக்களிடையே கிடைத்து வரும் வரவேற்பு, தி.மு.க.,வினரை பதற்றமடையச் செய்துள்ளது.

காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான தொன்மையான ஆன்மிக, கலாசார பிணைப்பை மீட்டெடுக்கவும், மக்களிடம் ஆன்மிக, தேசிய உணர்வை வளர்க்கவும், இம்மாதம் 17 முதல் டிசம்பர் 16 வரை, ஒரு மாத கால 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சிக்கு, மத்திய பா.ஜ., அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் இளைஞர்கள், மாணவர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், கிராம கோவில் பூசாரிகள் என, தமிழகத்தை சேர்ந்த 2,592 பேர் பங்கேற்கின்றனர்.


பயணம்



காசி தமிழ்ச் சங்கமத்திற்காகச் சென்ற முதல் குழுவினர், காசி மட்டுமல்லாது, உ.பி.,யில் உள்ள ஆன்மிக, கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

காசி தமிழ்ச் சங்கமம் துவக்க விழாவில், தமிழர்களின் உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து, பிரதமர் மோடி பங்கேற்றதும், தமிழகத்திற்கும் -காசிக்கும் உள்ள தொடர்புகள் குறித்து பேசியதும், அனைவரையும் கவர்ந்துள்ளது.

தமிழ் மடாதிபதிகளுடன், பிரதமர் மோடி காட்டிய நெருக்கமும், தி.மு.க.,வை கலக்கமடைய செய்து உள்ளது.

காசி தமிழ்ச் சங்கமம் வாயிலாக, தமிழகத்தின் ஆன்மிக, கலாசாரம் குறித்து இந்தியா முழுதும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இப்படி, காசி தமிழ்ச் சங்கமத்திற்கு பெருகி வரும் வரவேற்பு, தி.மு.க.,வை பதற்றமடைய செய்துள்ளது. இதனால், தி.மு.க.,வினரும், அக்கட்சியின் ஆதரவாளர்களும், அதை விமர்சித்து பேசியும், எழுதியும் வருகின்றனர்.

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் தி.மு.க., ஆதரவாளர்கள், 'தமிழகத்தில் காலுான்ற பா.ஜ., செய்யும் தந்திரமே காசி தமிழ்ச் சங்கமம்.


அழைக்கவில்லை



'மத்திய அரசு நிதியில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் ஸ்டாலினை ஏன் அழைக்கவில்லை?' என, கேள்வி எழுப்பியுள்ளனர்.

தி.மு.க., நடத்தும் ஊடகங்களில், காசி தமிழ்ச் சங்கமத்தை விமர்சித்து, தினமும் செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. துவக்க விழாவில் பங்கேற்ற இளையராஜாவையும் விமர்சித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு முன்னாள் செயலரும், எழுத்தாளருமான பி.ஏ.கிருஷ்ணன், 'திராவிட இயக்கத்தில் இருக்கும் சிலருக்கும், கலப்பட கம்யூனிஸ்ட்களுக்கும், காசி தமிழ்ச் சங்கமம் எரிச்சலை தந்துள்ளது.

'ஆனாலும், அது தமிழைப் பற்றி இந்தியா முழுதும் பேச வைத்திருக்கிறது என்பதே உண்மை' என கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X