விசாரணைக்கு அழைத்த டி.ஐ.ஜி., 'ஆப்சென்ட்'

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை:தமிழகத்தில் மோசடி பத்திரங்கள் தொடர்பான புகார்களை விசாரித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க, அனைத்து டி.ஐ.ஜி.,க்களுக்கும், மாவட்ட பதிவாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டத் திருத்தத்தால், இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பதிவு மாவட்டங்கள்

சென்னை:தமிழகத்தில் மோசடி பத்திரங்கள் தொடர்பான புகார்களை விசாரித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க, அனைத்து டி.ஐ.ஜி.,க்களுக்கும், மாவட்ட பதிவாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டத் திருத்தத்தால், இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பதிவு மாவட்டங்கள் அடங்கிய, தஞ்சை மண்டல டி.ஐ.ஜி.,யாக ஆனந்த் என்பவர் உள்ளார். மோசடி பத்திரங்கள் தொடர்பாக, விசாரிக்க வேண்டியது இவரது பொறுப்பு.

அதன்படி நேற்று, 20க்கும் மேற்பட்ட புகார்தாரர்களை விசாரணை வருமாறு, அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

அதையடுத்து, தஞ்சை டி.ஐ.ஜி., அலுவலகத்திற்கு நேற்று காலையில் புகார்தாரர்கள் வந்தனர். ஆனால், அங்கு விசாரணை மேற்கொள்ள வேண்டிய டி.ஐ.ஜி., இல்லை.

இது குறித்து புகார்தாரர்கள் விசாரித்ததில், 'டி.ஐ.ஜி., 20 நாட்கள் விடுப்பில் சென்று விட்டார். இன்று விசாரணை இல்லை, மீண்டும் அழைப்பு வரும்' என, தகவல் அளித்துள்ளனர்.

புகார்தாரர்கள் கூறியதாவது:

சார் - பதிவாளர் ஒருவர் விடுப்பில் சென்றால், வேறு ஒருவரை தற்காலிகமாக நியமித்து, பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், மோசடி பத்திரங்கள் குறித்து புகார் அளித்தால், அதில் தீர்வு காண வேண்டிய அதிகாரி திடீர் விடுப்பில் சென்று விடுகிறார்.

அவருக்கு பதிலாக, மாற்று அதிகாரி கூட இல்லாத நிலையில், டி.ஐ.ஜி., அலுவலகம் உள்ளது.

மக்கள் எந்த இடத்திலும் அலைக்கழிக்கப்பட கூடாது என்று பதிவுத் துறை அமைச்சர், செயலர், ஐ.ஜி., ஆகியோர் பேசி வருவதற்கு மாறாக, துறை அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X