இறால் விவசாயத்தை காப்பாற்ற வேண்டுகோள்

Added : நவ 22, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
நாகப்பட்டினம்:''தமிழகத்தில் அன்னிய செலாவணியை அதிகளவில் ஈட்டித் தரும் இறால் விவசாயத்தை மத்திய, மாநில அரசுகள் காப்பாற்ற வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் மணியன் பேசினார்.நாகை, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில், நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் உவர் நீர் இறால் வளர்ப்புக்கான காப்பீடு திட்டம் அறிமுக நிகழ்ச்சி, கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில்
 இறால் விவசாயத்தை காப்பாற்ற வேண்டுகோள்

நாகப்பட்டினம்:''தமிழகத்தில் அன்னிய செலாவணியை அதிகளவில் ஈட்டித் தரும் இறால் விவசாயத்தை மத்திய, மாநில அரசுகள் காப்பாற்ற வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் மணியன் பேசினார்.

நாகை, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில், நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் உவர் நீர் இறால் வளர்ப்புக்கான காப்பீடு திட்டம் அறிமுக நிகழ்ச்சி, கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.

மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார், மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணியன் மற்றும் இறால் உற்பத்தியாளர்கள், தனியார் காப்பீடு நிறுவன அலுவலர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மணியன் பேசியதாவது:

அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் இறால் வளர்ப்பை செய்யுங்கள் என அரசு தான் துாண்டுதல் செய்தது. ஆனால் தற்போது தரமான இறால் குஞ்சுகள் கிடைப்பதில்லை. தரமான இறால் குஞ்சுகள் வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.

உற்பத்தி செய்யப்பட்ட இறால்களை குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களே கொள்முதல் செய்கின்றன. தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் 'சிண்டிகேட்' அமைத்து உற்பத்தியாளர்களிடம் மிக குறைந்த விலையில் கொள்முதல் செய்கின்றனர்.

ஆந்திராவில் உள்ளது போல் தமிழகத்திலும் அரசு, இறால் தீவனத்திற்கான விலை, இறால் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். நெல் விவசாயிகளுக்கு மின் சலுகை வழங்குவது போல் இறால் விவசாயத்திற்கும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
23-நவ-202206:51:42 IST Report Abuse
NicoleThomson எல்லாவற்றிலும் இலவசம் ஆனால் லாபம் வந்தால் வரி கட்டமாட்டோம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X