எதிர்பார்ப்பு நிறைவேறுமா? வருவாய்த்துறையில் ஏக்கம்!

Added : நவ 22, 2022 | |
Advertisement
மதுரை:'வருவாய்த்துறையினர் கோரிக்கைகளுக்கு நவ., 26ல் நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகலாம்' என எதிர்பார்ப்பதாக, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் முருகையன் தெரிவித்தார்.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியலை உடனே வெளியிட வேண்டும்;

மதுரை:'வருவாய்த்துறையினர் கோரிக்கைகளுக்கு நவ., 26ல் நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகலாம்' என எதிர்பார்ப்பதாக, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் முருகையன் தெரிவித்தார்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.

துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியலை உடனே வெளியிட வேண்டும்; கூடுதல் துணைத்தாசில்தார் பணியிடங்கள் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியறுத்துகின்றனர்.

இதுகுறித்து இரு முறை அமைச்சர் அளவில் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

அடுத்த கட்டமாக கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வரும் 26ல் சென்னையில் மாநில செயற்குழு கூட்டம் நடத்த உள்ளனர்.

இது குறித்து மாநில தலைவர் எம்.பி.முருகையன் கூறியதாவது:

துணை கலெக்டர் பதவி உயர்வு, உட்பட பல கோரிக்கைகளை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம்.

இதில் முக்கியமானவற்றை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் அளவில் உறுதியளித்து உள்ளனர்.

வரும் 26ல் சென்னையில் நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளதால், அதில் ஏதாவது அறிவிப்புகளை வெளியிடுவர் என எதிர்பார்க்கிறோம். இதில் 38 மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X