திருப்பூர்:இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
முப்படை வீரர்களின் குடும்பத்தினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ஏழைகள், நிலமற்ற ஏழைகள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள் சொந்த வீடு கட்டி, மற்றவர்களுக்கு இணையாக வாழும் வகையில் வசதிகள் செய்யப்படுகிறது.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில்,'ஏற்கனவே முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுடன் மாற்றுத்திறனாளிகள் சேர்க்கப்பட வேண்டுமென கடந்த வாரம் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வீட்டுமனை பட்டா வழங்கும் போது முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்' என்றனர்.