இழப்பீடு வழங்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு

Added : நவ 22, 2022 | |
Advertisement
பெரம்பலுார்:சென்னையில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனங்கள், மனுதாரர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அரியலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.சென்னை, வளசரவாக்கம் பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் திலீப்குமார் மனைவி வசுந்தரா, 37. அவர் கடந்த 2017ல் சென்னை, ஆழ்வார் திருநகரில் உள்ள 'சம்யுக்தா ஸ்கேன் சென்டரில்' ஸ்கேன் பரிசோதனை செய்தார். அதில் பாதிப்பு

பெரம்பலுார்:சென்னையில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனங்கள், மனுதாரர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அரியலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

சென்னை, வளசரவாக்கம் பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் திலீப்குமார் மனைவி வசுந்தரா, 37. அவர் கடந்த 2017ல் சென்னை, ஆழ்வார் திருநகரில் உள்ள 'சம்யுக்தா ஸ்கேன் சென்டரில்' ஸ்கேன் பரிசோதனை செய்தார். அதில் பாதிப்பு தெரிந்தது.

டாக்டர் அறிவுரைப்படி, வேறு ஸ்கேன் சென்டரில் மீண்டும் ஸ்கேன் எடுத்த போது, எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரிந்தது. அதனால், சென்னை, தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தவறான ஸ்கேன் ரிப்போர்ட் கொடுத்த ஸ்கேன் சென்டர் மீது வசுந்தரா வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஜூலை மாதம், அந்த வழக்கு அரியலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் ராமராஜ் தலைமையிலான அமர்வு, தவறான அறிக்கையை வழங்கிய ஸ்கேன் சென்டரின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு, புகார்தாரருக்கு இழப்பீடாக 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

அதே போல், சென்னை, வடபழனியை சேர்ந்த வாசுதேவன் மகன் விபின்தேவ், 33, என்பவர், 2016ல் தியாகராய நகரில் உள்ள தனியார் அழகு மருத்துவமனையில், 60 ஆயிரம் ரூபாய் செலுத்தி, தலையில் முடி நடும் சிகிச்சை பெற்றுஉள்ளார்.

ஆனால், சிகிச்சைக்கு பின், முடி உதிர்வு அதிகமானது.

இது தொடர்பாக, மனுதாரர் தொடர்ந்த வழக்கு விசாரணையில், ஒப்பந்தத்துக்கு மாறாக தனியார் அழகு மருத்துவமனை செயல்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டது.

அதனால், அந்த மருத்துவமனையின் சேவை குறைபாட்டுக்காக, புகார்தாரருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X