14 காரைக்கால் மீனவர்கள் இலங்கையில் விடுதலை

Added : நவ 22, 2022 | |
Advertisement
காரைக்கால்,:இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 14 பேரை அந்நாட்டு அரசு விடுதலை செய்துஉள்ளது.காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவரது விசைப்படகில், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், 34; சிவக்குமார், 30; உள்ளிட்ட 14 மீனவர்கள், 16ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன்

காரைக்கால்,:இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 14 பேரை அந்நாட்டு அரசு விடுதலை செய்துஉள்ளது.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவரது விசைப்படகில், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், 34; சிவக்குமார், 30; உள்ளிட்ட 14 மீனவர்கள், 16ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 14 மீனவர்களையும், எல்லை தாண்டி வந்ததாக கூறி துப்பாக்கி முனையில் கைது செய்து, அவர்களை விசைப்படகுடன் இலங்கை திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 14 பேரையும் பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மீனவர்களை விடுவிக்க வேண்டி அவரது குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்று, இலங்கை அரசின் உத்தரவின்படி, பருத்தித்துறை நீதிமன்றம், காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்களையும் விடுதலை செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவர் என, மீன் வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X