சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு சாலையில் உடலை வைத்து போராட்டம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
திருச்சி:மணப்பாறை அருகே, சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதை கண்டித்து, விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை, சாலையில் வைத்து நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். பிரேத பரிசோதனைதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கத்திக்காரன்பட்டியை சேர்ந்தவர் பெரியக்காள், 65. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மணப்பாறையில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த

திருச்சி:மணப்பாறை அருகே, சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதை கண்டித்து, விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை, சாலையில் வைத்து நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.


பிரேத பரிசோதனை



திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கத்திக்காரன்பட்டியை சேர்ந்தவர் பெரியக்காள், 65. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மணப்பாறையில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த அவர், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்கு பின், கத்திகாரன்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடலை, சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.


பரபரப்பு



சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை, தனி நபர் ஒருவர், பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்துள்ளதால், ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கும், உடலை அடக்கம் செய்யச் சென்றவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த பெரியக்காளின் உறவினர்கள், உடலை சாலையில் வைத்து எரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

அப்பகுதி மக்கள், வருவாய்த்துறை மற்றும் வையம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த அதிகாரிகள், இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

அதனால், இறந்தவரின் உறவினர்கள் ஆக்கிரமிப்பு வேலியை அகற்றி விட்டு, உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரியூட்ட இறுதிச்சடங்குள் செய்தனர்.

இது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X