ஆள் மாறாட்டம் செய்து நிலம் 'ஆட்டை' 6 பேர் மீது வழக்கு பதிவு: மூவர் கைது

Added : நவ 22, 2022 | |
Advertisement
தியாகதுருகம்:தியாகதுருகம் அருகே ஆள் மாறாட்டம் செய்து, நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்ட கிராம உதவியாளர் உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிந்து மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த கலையநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சொக்கலிங்கம் மகன்கள் குருலிங்கம், சுந்தர்ராஜன். இவர்களுக்கு அதே பகுதியில், 2.45 ஏக்கர் நிலம் உள்ளது.தற்போது

தியாகதுருகம்:தியாகதுருகம் அருகே ஆள் மாறாட்டம் செய்து, நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்ட கிராம உதவியாளர் உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிந்து மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த கலையநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சொக்கலிங்கம் மகன்கள் குருலிங்கம், சுந்தர்ராஜன். இவர்களுக்கு அதே பகுதியில், 2.45 ஏக்கர் நிலம் உள்ளது.

தற்போது இருவரும் எங்கே இருக்கின்றனர் என தெரியாத நிலையில், இந்த இடத்தை அதே ஊரைச் சேர்ந்த ரவி, 80; என்பவர், 50 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் சூ. பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குன்னியூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வரும் சிவா, 43; அந்த சொத்துக்களை அபகரிக்க முடிவு செய்தார்.

இதற்காக, அரும்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெரியப்பா சுப்ரமணி, 57; என்பவரை குருலிங்கம் எனவும், சூ.பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, 53, என்பவரை சுந்தர்ராஜன் எனவும் ஆள்மாறாட்டம் செய்து போலியாக ஆதார் அட்டை தயார் செய்துள்ளார்.

இருவரும் சேர்ந்து, 2019ம் ஆண்டு சிவாவின் உறவினரான கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த பா.கொத்தனுார் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மனைவி ராஜகுமாரி, 32, என்பவருக்கு தியாகதுருகம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 'பவர்' பத்திரம் எழுதி வைத்துள்ளனர்.

இவரிடமிருந்து இந்த சொத்தை, 2019ல் சிவா தந்தையான மாரிமுத்து, 70, பெயரில் கிரயம் பெற்று, சங்கராபுரம் அடுத்த லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கமாலுதீன் மகன் பீர்முகமது என்பவர் பெயருக்கு கிரய மாற்றம் செய்துஉள்ளனர்.

போலி ஆவணங்கள் தயாரித்து ஆள் மாறாட்டம் செய்து நிலத்தை விற்பனை செய்தது தியாகதுருகம் சார் பதிவாளர் சங்கீதாவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

அதன் படி, சுப்ரமணி, மாரிமுத்து, ராஜகுமாரி, கிராம உதவியாளர் சிவா உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிந்து, மாரிமுத்து, ராஜகுமாரி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X