மின்மாற்றிக்கு 'கலைஞர்' பெயர் போராட்டம் அறிவித்தவருக்கு மிரட்டல்

Added : நவ 22, 2022 | |
Advertisement
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் உள்ள மின்மாற்றிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக, அ.தி.மு.க., பிரமுகர் அறிவித்துள்ளார். நடைமுறைIதமிழகத்தில் மின்மாற்றி அமைந்துள்ள பகுதியின் பெயரையோ அல்லது தெருவின் பெயரையோ வைப்பது வழக்கம். உதாரணமாக, காமராஜர் நகரில் மின்மாற்றி அமைக்கப்பட்டால், காமராஜர் நகர்

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் உள்ள மின்மாற்றிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக, அ.தி.மு.க., பிரமுகர் அறிவித்துள்ளார்.


நடைமுறைI



தமிழகத்தில் மின்மாற்றி அமைந்துள்ள பகுதியின் பெயரையோ அல்லது தெருவின் பெயரையோ வைப்பது வழக்கம்.

உதாரணமாக, காமராஜர் நகரில் மின்மாற்றி அமைக்கப்பட்டால், காமராஜர் நகர் மின்மாற்றி என பெயரிடுவர்.

அப்போது தான் எளிதாக அடையாளம் கண்டு, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதற்காக இந்த நடைமுறைIயை பின்பற்றுகின்றனர்.

மூன்று நாட்களுக்கு முன், கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவில் பகுதியில் வைக்கப்பட்ட மின்மாற்றிக்கு 'கலைஞர் மின்மாற்றி' என்ற பெயர் எழுதி வைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதியுமான தமிழ்மாறன் கூறியதாவது:

வழக்கத்திற்கு மாறாக, மின்மாற்றிக்கு பெயர் சூட்டப்பட்டது குறித்து உதவி மின்பொறியாளர் பிரமியாவிடம் கேட்டபோது, மழுப்பலாக பதில் சொன்னார். அதிகாரிகள் அரசியல்வாதிகளை போல் செயல்படுகின்றனர்.


மிரட்டல்



இந்த தவறான முன்னுதாரணத்துக்கு காரணமாக அதிகாரிகளை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்திருந்தேன்.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க.,வினர் என்னை தொலைபேசி மூலம் மிரட்டுகின்றனர்.

வீட்டில் நான் இல்லாதபோது, தி.மு.க.,வினர் சிலர் வீட்டுக்கு வந்து என் மனைவியையும், குடும்பத்தினரையும் மிரட்டிஉள்ளனர்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசில் எனது மனைவி புகார் அளித்துஉள்ளார்.

எவ்வளவு மிரட்டினாலும் ஜனநாயக முறையில் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு, தமிழ்மாறன் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X