கோவைக்கான புதிய 'மாஸ்டர் பிளான்' நகர ஊரமைப்புத்துறை அழைப்பு

Added : நவ 22, 2022 | |
Advertisement
கோவைக்கான புதிய மாஸ்டர் பிளானுக்கு இறுதி வடிவம் கொடுப்பதன் ஒரு பகுதியாக, அரசுத்துறைகளின் உத்தேசத் திட்டங்களை அறிவது தொடர்பாக இன்று முக்கிய கூட்டம் நடக்கிறது. கூடுதல் பகுதிகோவையில் இப்போது நடைமுறையில் உள்ள மாஸ்டர் பிளான், கடந்த, 1994ல் அமலுக்கு வந்தது. கடந்த, 2004ல், புதுப்பித்திருக்க வேண்டும். இன்று வரை புதுப்பிக்கப்படாததால், நகரின் வளர்ச்சி தடைபட்டுள்ளது.

கோவைக்கான புதிய மாஸ்டர் பிளானுக்கு இறுதி வடிவம் கொடுப்பதன் ஒரு பகுதியாக, அரசுத்துறைகளின் உத்தேசத் திட்டங்களை அறிவது தொடர்பாக இன்று முக்கிய கூட்டம் நடக்கிறது.


கூடுதல் பகுதி



கோவையில் இப்போது நடைமுறையில் உள்ள மாஸ்டர் பிளான், கடந்த, 1994ல் அமலுக்கு வந்தது. கடந்த, 2004ல், புதுப்பித்திருக்க வேண்டும்.

இன்று வரை புதுப்பிக்கப்படாததால், நகரின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்தபின்பு, புதிய மாஸ்டர் பிளான் விரைவில் வெளியிடப்படுமென்று அறிவிக்கப்பட்டது; ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும் வெளியாகவில்லை.

அடுத்த, 20 ஆண்டுகளுக்கேற்ற வகையில், இதை தயாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. புதிய மாஸ்டர் பிளானில் பழைய பகுதியைவிட கூடுதல் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தற்போது, கோவை மாநகராட்சிக்குட்பட்ட, 24 வருவாய் கிராமங்கள், கூடலுார், கருமத்தம்பட்டி, மதுக்கரை மற்றும் காரமடை ஆகிய நகராட்சிகள், 24 பேரூராட்சிகள் மற்றும், 66 கிராம ஊராட்சிகளை இணைத்து புதிய மாஸ்டர் பிளான் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.


எதிர்பார்ப்பு



இதற்கான நிலவியல் சர்வே, கோவை கற்பகம் பொறியியல் கல்லுாரியின் தொழில்நுட்ப உதவியுடன், ஜி.பி.எஸ்., முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய மாஸ்டர் பிளானில் இடம்பெறும் உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட பகுதிகளில், அரசுத்துறைகளின் சார்பில் உத்தேசத் திட்டங்கள் குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு, நகர ஊரமைப்புத்துறை அழைப்பு விடுத்துஉள்ளது.

கோவை கற்பகம் உயர் கல்வி மையத்திலுள்ள ஆர்க்கிடெக்ட் கூட்ட அரங்கில், இன்று காலை, 11:00 மணிக்கு இக்கூட்டம் நடக்கிறது.

இதற்கு பின்பாவது, புதிய மாஸ்டர் பிளான் தயாரிப்பு பணிகள் விரைவாக முடிக்கப்பெற்று அமலுக்கு வரவேண்டுமென்பதே கோவை மக்களின் எதிர்பார்ப்பு.


- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X