தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் அதிகரிப்பு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைவு ஏன்?

Added : நவ 22, 2022 | |
Advertisement
தமிழகத்தில், தனியார் மருத்துவமனைகளில் பிரவசம் நடப்பது, 40 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதேநேரம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரவசம் குறைந்து வருகிறது.தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மகப்பேறு சேவை வழங்கப்படுகிறது. இவற்றில் சராசரியாக தினமும், 1,496 பிரசவங்கள் நடக்கிறது.இந்நிலையில்,

தமிழகத்தில், தனியார் மருத்துவமனைகளில் பிரவசம் நடப்பது, 40 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதேநேரம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரவசம் குறைந்து வருகிறது.

தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மகப்பேறு சேவை வழங்கப்படுகிறது. இவற்றில் சராசரியாக தினமும், 1,496 பிரசவங்கள் நடக்கிறது.

இந்நிலையில், சில ஆண்டுகளாக, தமிழகத்தில் தனியார் மருத்துவமனையில் பார்க்கப்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதற்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரவசம் பார்ப்பதில், மக்களுக்கு ஏற்படுள்ள நம்பிக்கையின்மை முக்கிய காரணமாக கூறப்டுகிறது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 2011ம் ஆண்டில், 28.3 சதவீதம் பிரசவம் பார்க்கப்பட்டது.

அவை படிப்படியாக குறைந்து, தற்போது, 10.7 சதவீதமாக உள்ளது. உரிய நேரத்தில் டாக்டர்கள் இல்லாதது, உட்கட்டமைப்பு வசதி இல்லாதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மேலும், கர்ப்பிணியர் அல்லது சிசு உயிரிழப்பு போன்றவை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மீதான நம்பிக்கை இன்மையை அதிகரித்து உள்ளது.

அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 2011ம் ஆண்டில் 37.9 சதவீதமாக இருந்த பிரசவங்கள், தற்போது, 49.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனைகளில், 31.1 சதவீதம் இருந்து வந்த பிரசவங்கள், தற்போது, 39.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், 60 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளிலும், 40 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுகிறது.

இதே நிலை தொடர்ந்தால், தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். எனவே, அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X