'புதிய டி.இ.ஓ., அலுவலகங்களில் சேர், டேபிள்களுக்கு வழியில்லை' நிதி ஒதுக்குமா கல்வித்துறை?

Added : நவ 22, 2022 | |
Advertisement
மதுரை:தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு சேர், டேபிள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வாங்க போதிய நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் கல்வித்துறை அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கல்வித்துறையின் கீழ் இருந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் நிர்வாக சீரமைப்பிற்காக 55 இடைநிலை டி.இ.ஓ.,க்கள், 57 தொடக்க கல்வி டிஇ.ஓ.,க்கள், 39 தனியார் பள்ளிகள் டி.இ.ஓ.,க்கள் அலுவலகங்களாக

மதுரை:தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு சேர், டேபிள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வாங்க போதிய நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் கல்வித்துறை அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கல்வித்துறையின் கீழ் இருந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் நிர்வாக சீரமைப்பிற்காக 55 இடைநிலை டி.இ.ஓ.,க்கள், 57 தொடக்க கல்வி டிஇ.ஓ.,க்கள், 39 தனியார் பள்ளிகள் டி.இ.ஓ.,க்கள் அலுவலகங்களாக மாற்றியமைக்கப்பட்டன.

மதுரை உட்பட பல மாவட்டங்களில் மாற்றியமைக்கப்பட்ட அல்லது புதிதாக உருவாக்கப்பட்ட டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு முழு எண்ணிக்கையில் அலுவலர்கள் ஒதுக்கீடு செய்து பல நாட்களாகியும் உரிய அலுவலகம் ஒதுக்கவில்லை.

ஏற்கனவே செயல்படும் டி.இ.ஓ., வட்டாரக் கல்வி, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட அலுவலகங்களுடன் சேர்ந்து செயல்படுவதால் இடநெருக்கடி பிரச்னையில் அலுவலர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்த அலுவலகங்களுக்கு கணினி உள்ளிட்ட உபகரணங்களும், சேர், டேபிள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களும் வழங்கப்படவில்லை. இவற்றை தனியார் பள்ளிகளின் 'அன்பளிப்பு', அலுவலர் சொந்த பணம் செலவிட்டு தற்காலிகமாக இயக்கி வருகின்றன.

கல்வி அலுவலர்கள் கூறியதாவது:

அரசு துறை சார்பில் எந்த புதிய அலுவலகம் உருவாக்கப்பட்டாலும் அதற்கான உபகரணங்கள், எழுதுபொருட்கள், தளவாடப்பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான நிதி ஒதுக்கப்படும்.

ஆனால் கல்வித்துறையில் இதுவரை புதிய அலுவலகங்களுக்கு நிதிஒதுக்கவில்லை. முழு அளவில் செயல்பட தனி அலுவலகமும், தளவாடப்பொருட்கள் வாங்க நிதியும் விரைவில் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X