தலைமை காவலருக்கு டி.ஜி.பி., பாராட்டு

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை:மழை நீரை வடியச் செய்து, போக்குவரத்தை சீர் செய்த தலைமை காவலரை நேரில் அழைத்து, டி.ஜி.பி., சைலேந்திரபாபு பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.மதுரை மாவட்டம், செல்லுார் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிபவர் ராமன். இவர், கனமழை காரணமாக, செல்லுார் கல் பாலத்தில் தேங்கி இருந்த மழை நீரை, சாலை ஓரத்தில் இருந்த வடிகால் அடைப்பை வெறுங்கையால் அகற்றினார். இதனால், மழை நீர் வேகமாக
 தலைமை காவலருக்கு டி.ஜி.பி., பாராட்டு

சென்னை:மழை நீரை வடியச் செய்து, போக்குவரத்தை சீர் செய்த தலைமை காவலரை நேரில் அழைத்து, டி.ஜி.பி., சைலேந்திரபாபு பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

மதுரை மாவட்டம், செல்லுார் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிபவர் ராமன். இவர், கனமழை காரணமாக, செல்லுார் கல் பாலத்தில் தேங்கி இருந்த மழை நீரை, சாலை ஓரத்தில் இருந்த வடிகால் அடைப்பை வெறுங்கையால் அகற்றினார். இதனால், மழை நீர் வேகமாக வைகை ஆற்றில் வடிந்தது; போக்குவரத்தும் சீரானது.

இப்பணியில் ஈடுபட்ட தலைமை காவலரை, பொது மக்கள், மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பரப்பி, வாழ்த்து தெரிவித்தனர்.

தகவல் அறிந்து, தலைமை காவலர் ராமனை , டி.ஜி.பி., சைலேந்திரபாபு, தன் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X