கழிவு நீர் தொட்டியை மனிதர்கள் சுத்தம் செய்வதை தடுக்க நடவடிக்கை

Added : நவ 22, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடை செய்த சட்டம் அமலில் உள்ளது. நவீன உலகத்தில் அதற்கான வசதிகள் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இருந்தும் சில இடங்களில் கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணி நடக்கும் போது விஷ வாயு தாக்கி உயிர் பலி ஏற்படுகிறது. அவ்வப்போது இவ்வாறான சம்பவங்கள் நடப்பதால் எதிர் காலத்தில் இது போன்று உயிரிழப்பு

காஞ்சிபுரம்:மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடை செய்த சட்டம் அமலில் உள்ளது. நவீன உலகத்தில் அதற்கான வசதிகள் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இருந்தும் சில இடங்களில் கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணி நடக்கும் போது விஷ வாயு தாக்கி உயிர் பலி ஏற்படுகிறது.

அவ்வப்போது இவ்வாறான சம்பவங்கள் நடப்பதால் எதிர் காலத்தில் இது போன்று உயிரிழப்பு ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


விஷவாயு


இதில், கடைகள், பெரிய வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் போன்ற பகுதிகளில் கழிவுநீர் தொட்டிகளில் ஏற்படும் அடைப்பை நீக்குவதற்கு மனிதர்களை பயன்படுத்த கூடாது.

ஏழை எளிய மக்கள் ஒரு நாள் கூலிக்காக அவ்வாறு கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இறக்க நேர்கிறது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கூறியதாவது:

மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றும் தடை சட்டம் அமலில் உள்ளது. ஆனால் இந்த சட்டத்தை மீறி சில இடங்களில் கழிவுநீர் தொட்டியில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது.

இது போன்று உயிரிழப்புகள் ஏற்படுவதை தடை செய்யும் வகையில், கழிவுநீர் தொட்டிகள் பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் பொது மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பதாகை வைக்க காவல் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


விழிப்புணர்வு பதாகை


இதையும் மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தடை சட்டம் அமலில் உள்ளது என்பதை பாமர மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பதாகை வைப்பதற்கு காவல் துறை வாயிலாக தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் ஆகிய பகுதிகளில் வைக்க அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X