அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:கார்த்திகை தீபத்திருவிழா டிச., 6ல் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவையொட்டி, வீடு, கடை, அலுவலகம், கோவில்களில் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது வழக்கம்.கார்த்திகை தீபத்தையொட்டி, காஞ்சிபுரம், திருக்காலிமேடு, உடையார் தெரு, பாலாஜி நகரில், 10க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள், அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.10 ஆயிரம்
 அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரம்

காஞ்சிபுரம்:கார்த்திகை தீபத்திருவிழா டிச., 6ல் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவையொட்டி, வீடு, கடை, அலுவலகம், கோவில்களில் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது வழக்கம்.

கார்த்திகை தீபத்தையொட்டி, காஞ்சிபுரம், திருக்காலிமேடு, உடையார் தெரு, பாலாஜி நகரில், 10க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள், அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


10 ஆயிரம் விளக்கு


இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளி பி.சிவலிங்க உடையார் கூறியதாவது:

கார்த்திகை தீபத்தையொட்டி கடந்த இரு நாட்களுக்கு முன், அகல் விளக்கு தயார் செய்யும் பணியை துவக்கி உள்ளோம். 10 ஆயிரம் அகல் விளக்கு தயார் செய்ய இலக்கு நிர்ணயித்து, ஒரு நாளைக்கு, 1,500 விளக்கு தயார் செய்கிறோம்.

மொத்த விலையில், ஒரு விளக்கு ஒரு ரூபாய்க்கும், சில்லறை விலையில், ஐந்து விளக்கு 10 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துஉள்ளோம்.

மழை பெய்யாமல் இருந்தால்தான், அகல் விளக்கு தயாரித்து அதை வெயிலில் உலர்த்தி, சூளையில் தீயிட முடியும். இடையில் மழை பெய்தால் தொழில் முடங்கி விடும்.

அகல் விளக்கு தயாரிப்பில் என் மனைவி எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

காலை 8:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மழை பெய்யும்போது தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது.


அனுமதி வேண்டும்


காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்நிலைகளில் மண் எடுக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால், இலவசமாக கிடைத்த களிமண்ணை, பிற மாவட்டங்களில் இருந்து பணம் கொடுத்து களிமண் வாங்கி வருகிறோம். வாகன போக்குவரத்து செலவால் மண்பாண்டம் தயாரிக்க கூடுதல் செலவாகிறது.

மழை காலத்தில் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. இத்தொழிலில் வரும் வருமானம், அன்றாட செலவுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.

சேமித்து வைக்க வழியில்லை. எனவே, மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நீர்நிலைகளில் களிமண் எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

மழைக்காலங்களில், மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்யவும், உற்பத்தி செய்த மண்பாண்டங்களை சேமித்து வைத்து சூளைபோடுவதற்கு போதுமான இடவசதி இல்லாததால் தொழில் செய்ய முடியாமல் அவதிப்படுகிறோம்.

எனவே, கைத்தொழில் வாரியத்தின் மூலம் திருக்காலிமேட்டில் மண்பாண்ட தொழிலுக்கான தொழிற்கூடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X