செங்கல்பட்டில் மீண்டும் கட்டுமான பல்கலைக்கழகம் அமைச்சர் அன்பரசன் உறுதி

Added : நவ 22, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் ஆர்த்தி தலைமையில், கலெக்டர் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. உபகரணம்இதில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர்
 செங்கல்பட்டில் மீண்டும் கட்டுமான பல்கலைக்கழகம் அமைச்சர் அன்பரசன் உறுதி

காஞ்சிபுரம்:தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் ஆர்த்தி தலைமையில், கலெக்டர் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.


உபகரணம்


இதில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார், சட்டசபை உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன், செல்வப்பெருந்தகை, கருணாநிதி, வரலட்சுமி, பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 83.74 லட்ச ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை, அமைச்சர்கள் கணேசன், அன்பரசன் ஆகியோர் வழங்கினர்.

தொண்டையில் ஏற்பட்ட தொந்தரவு காரணமாக அமைச்சர் கணேசன் பேசவில்லை.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் 4.27 லட்சம் தொழிலாளர்களுக்கு, 322.78 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


ஒரு லட்சம் பேர்


கடந்த 18 மாதங்களில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில், 7.71 லட்சம் பேர் புதியதாக உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

இதில், 17 வகையான நல வாரியங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் ஆகியவை கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், இதுவரை 18 ஆயிரத்து, 695 பயனாளிகளுக்கு, 11.75 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், 2,883 பயனாளிகளுக்கு, 83.75 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்போதெல்லாம், வாரியங்களை ஒன்றாக இணைத்துவிடுவர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, நலவாரியங்களை முதன் முதலாக அமைத்தார். 2006- -2011 தி.மு.க., ஆட்சியின்போது, செங்கல்பட்டு ஐ.டி.ஐ., வளாகத்தில், கட்டுமான பல்கலைக்கழகத்தை நாங்கள் உருவாக்கினோம். ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டு துவக்கினோம்.

ஆனால் அ.தி.மு.க., அரசு அமைந்தவுடன் அதை மூடிவிட்டார்கள். மீண்டும் கட்டுமான பல்கலைக்கழகத்தை நாங்கள் உருவாக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X