அரசு பஸ் ஊழியர்களை தாக்கிய வாலிபர் கைது

Added : நவ 22, 2022 | |
Advertisement
பெரம்பலுார்:-அரசு பஸ்சை மறித்து டிரைவர், கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.அரியலுார் மாவட்டம், கோட்டியால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 34. சுத்தமல்லியில் இருந்து, தா.பழூர் வழியாக ஜெயங்கொண்டம் சென்ற அரசு டவுன் பஸ்சை வழிமறித்து, நேற்று அவர் தகராறில் ஈடுபட்டார்.இதை கண்டித்த டிரைவர் கல்யாணசுந்தரத்தை, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். அதை தடுக்க

பெரம்பலுார்:-அரசு பஸ்சை மறித்து டிரைவர், கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியலுார் மாவட்டம், கோட்டியால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 34. சுத்தமல்லியில் இருந்து, தா.பழூர் வழியாக ஜெயங்கொண்டம் சென்ற அரசு டவுன் பஸ்சை வழிமறித்து, நேற்று அவர் தகராறில் ஈடுபட்டார்.

இதை கண்டித்த டிரைவர் கல்யாணசுந்தரத்தை, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். அதை தடுக்க வந்த கண்டக்டர் துரைராஜையும், ராஜ்குமார் தாக்கினார்.

பஸ்சில் இருந்த பயணியர், ராஜ்குமாரை தடுத்து, டிரைவர் மற்றும் கண்டக்டரை மீட்டனர். ராஜ்குமார் குடிபோதையில் தாக்கியதாகவும், பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தடுக்க வந்த கண்டக்டரை தாக்கியதாகவும், டிரைவர் கல்யாணசுந்தரம், தா.பழூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்படி, போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X