பொது வெளியில் திரையிடப்பட்ட 'பொன்னியின் செல்வன்' படம் சர்ச்சையில் சிக்கிய தஞ்சை மேயர், எம்.எல்.ஏ.,க்கள்

Added : நவ 22, 2022 | |
Advertisement
தஞ்சாவூர்:தஞ்சாவூர் காமராஜ் மார்க்கெட்டை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கும் நேரம் மாற்றப்பட்டதால், எம்.எல்.ஏ., மற்றும் மேயர் உள்ளிட்டோர் அங்கு அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி., திரையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தனர்.தஞ்சாவூர் அரண்மனை அருகே, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. மார்க்கெட்டில்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் காமராஜ் மார்க்கெட்டை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கும் நேரம் மாற்றப்பட்டதால், எம்.எல்.ஏ., மற்றும் மேயர் உள்ளிட்டோர் அங்கு அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி., திரையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தனர்.

தஞ்சாவூர் அரண்மனை அருகே, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது.

மார்க்கெட்டில் கட்டடங்கள் பழுதடைந்ததால், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 20.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறி மார்க்கெட் கட்டடங்கள் சீரமைக்கப்பட்டன.

அதன்படி, 303 சிறிய மற்றும் பெரிய கடைகளும், 200 இரு சக்கர வாகனங்களும், 30 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று காலை 10:00 மணிக்கு, வீடியோ கான்பரன்ஸ் வழியே முதல்வர் ஸ்டாலின் மார்க்கெட்டை திறப்பதாக கூறப்பட்டது.

அதற்காக, முதல்வர் மார்க்கெட் திறப்பதை பார்க்கும் வகையில், பெரிய எல்.இ.டி., திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எம்.எல்.ஏ.,க்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கட்சியினர் அங்கு திரண்டிருந்தனர். மார்க்கெட் திறப்பு நிகழ்ச்சி மதியம், 12:00 மணிக்கு மாற்றப்பட்டதாக, முதல்வர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது.

அதனால், கட்சியினரும், பிரமுகர்களும் கலைந்து செல்வதை தவிர்க்கும் வகையில், எல்.இ.டி., திரையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஒளிபரப்பினர். எம்.எல்.ஏ.,க்கள், மேயர், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவரும் படத்தை பார்த்து ரசித்தனர்.

தியேட்டர்கள், ஓ.டி.டி., தளங்களில் வெளியாகியுள்ள சினிமாவை, எந்த உரிமையும் பெறாமல், திறந்த வெளியில் தி.மு.க., பிரமுகர்களும், தொண்டர்களும் அதிகாரிகளுடன் பார்த்து ரசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், அரசின் திட்டங்களை ஒளிபரப்பாமல் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து ரசித்த எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மேயர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X