கணவன் கைவிட்ட பெண்களுக்கு விரைந்து கடன் வழங்க அறிவுரை

Updated : நவ 23, 2022 | Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை:கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, 5 சதவீத வட்டியில், விரைந்து கடன்களை வழங்குமாறு, கூட்டுறவு வங்கி அதிகாரிகளை, கூட்டுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது.17 வகை கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க் கடன், நகைக் கடன், சிறு வணிகக் கடன் என, 17 வகையான கடன்கள் வழங்கப்
Women, Self Employed, Cooperative Bank,பெண்கள், சுய தொழில், கூட்டுறவு வங்கி, Chennai, Husband,  சென்னை, கணவன்,

சென்னை:கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, 5 சதவீத வட்டியில், விரைந்து கடன்களை வழங்குமாறு, கூட்டுறவு வங்கி அதிகாரிகளை, கூட்டுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது.


17 வகை


கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க் கடன், நகைக் கடன், சிறு வணிகக் கடன் என, 17 வகையான கடன்கள் வழங்கப் படுகின்றன.

குறைந்த வட்டி என்பதோடு, அதிக கெடுபிடிகள் இல்லாததால், பலரும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சுயதொழில் செய்து, தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள, கூட்டுறவு வங்கிகளில், 5 சதவீத வட்டியில் கடன் வழங்கும் திட்டம், 2021 நவம்பரில் துவக்கப்பட்டது.

இதன்படி, ஒருவருக்கு அதிகபட்சம், 25 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில், அக்., வரை, 3,820 பெண்களுக்கு, 7.42 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளன.


ரூ.4.36 கோடி



இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த நிதியாண்டில், 2,436 பெண்களுக்கு, 4.36 கோடி ரூபாய்க்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது.

கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், சுய தொழில் துவங்க, தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தடுக்கவே, குறைந்த வட்டியில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.

இந்த நிதியாண்டு முடிய, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன.

எனவே, கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, கடன் வழங்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அந்த பிரிவில் விரைந்து கடன் வழங்குமாறு, கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X