ரூ.671 கோடியில் 75 திட்டங்கள் துவக்கி வைத்தார் ஸ்டாலின்

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை:நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 671.80 கோடி ரூபாய் மதிப்பில் முடிவடைந்த, 75 திட்டப் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் , 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார். நான்கு புதிய அலுவலக கட்டடப் பணிகளுக்கு, அடிக்கல் நாட்டினார். குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 111.24 கோடி ரூபாயில், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டத்தில், தலா இரண்டு கூட்டுக் குடிநீர்

சென்னை:நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 671.80 கோடி ரூபாய் மதிப்பில் முடிவடைந்த, 75 திட்டப் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் , 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார். நான்கு புதிய அலுவலக கட்டடப் பணிகளுக்கு, அடிக்கல் நாட்டினார்.

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 111.24 கோடி ரூபாயில், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டத்தில், தலா இரண்டு கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள்; மதுரையில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைப் பணிகள் முடிந்துள்ளன

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், சென்னையில், 398.51 கோடி ரூபாயில், 18 திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. பேரூராட்சி ஆணையரகம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சியில், மூன்று கோடி ரூபாயில், நவீன பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது

நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், திருப்பூர் மாநகராட்சி, திருத்துறைப்பூண்டி, போடி நாயக்கனுார் நகராட்சி ஆகியவற்றில், 109.56 கோடி ரூபாயில், 12 திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன

சென்னை மாநகராட்சி சார்பில், 18 பூங்காக்கள், நான்கு புதிய விளையாட்டுத் திடல்கள், ஆறு இரவு காப்பகங்கள், இரண்டு சிறப்பு காப்பகங்கள், மூன்று வீடற்றோருக்கான காப்பகங்கள்; ஈரக்கழிவில் இருந்து எரிவாயு தயாரிக்கும் நிலையம் என, 49.49 கோடி ரூபாயில், 38 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.

இந்த பணிகளை, முதல்வர் ஸ்டாலின் , 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.

நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், திருமுருகன்பூண்டி, சோளிங்கர், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை நகராட்சிகளுக்கு தலா, 3.50 கோடி ரூபாயில், நான்கு நகராட்சி அலுவலக கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இவற்றுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.


பணி நியமன ஆணை


பேரூராட்சிகள் துறையில், 29 பேர்; சென்னை குடிநீர் வாரியத்தில், 48 பேர்; நகராட்சி நிர்வாகத் துறையில், 66 பேர் என, மொத்தம், 143 பேர் பணியின் போது இறந்தனர். அவர்களின் வாரிசுதாரர்களுக்கும், பல்வேறு பணியிடங்களுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு அடையாளமாக, 15 பேருக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நேரு, சென்னை மேயர் பிரியா, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும்அலுவலர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X