சமூக வலைதளங்களில் பரவும் சைக்கிள் திருடும் 'வீடியோ'

Added : நவ 22, 2022 | |
Advertisement
மறைமலை நகர்:மறைமலை நகர் நந்தனார் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை, 50. திருவள்ளூர் சாலையில், செருப்பு கடை வைத்து உள்ளார்.நேற்று முன்தினம் மதியம், கடையில் இருந்து வீட்டிற்கு, சாப்பிடுவதற்காக சைக்கிளில் சென்றார். வீட்டின் வாசலில் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்ற அவர், திரும்பி வந்து பார்த்தபோது, சைக்கிள் மாயமாகி இருந்தது.அருகில் இருந்த 'சிசிடிவி' காட்சிகளை பார்த்த போது, இளைஞர்
 சமூக வலைதளங்களில் பரவும் சைக்கிள் திருடும் 'வீடியோ'

மறைமலை நகர்:மறைமலை நகர் நந்தனார் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை, 50. திருவள்ளூர் சாலையில், செருப்பு கடை வைத்து உள்ளார்.

நேற்று முன்தினம் மதியம், கடையில் இருந்து வீட்டிற்கு, சாப்பிடுவதற்காக சைக்கிளில் சென்றார். வீட்டின் வாசலில் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்ற அவர், திரும்பி வந்து பார்த்தபோது, சைக்கிள் மாயமாகி இருந்தது.

அருகில் இருந்த 'சிசிடிவி' காட்சிகளை பார்த்த போது, இளைஞர் ஒருவர், நோட்டமிட்டு சைக்கிளை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இது குறித்து, அந்த பகுதியில் விசாரித்த போது, கடந்த வாரமும், இதே பகுதியில் சைக்கிள் திருடு போனது தெரிய வந்தது.

இவ்வாறு திருடப்படும் சைக்கிள்களை, வட மாநில இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக, பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சைக்கிள் திருடும் 'சிசிடிவி' காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X