சாலையில் தேங்கும் கழிவுநீர்: குன்னத்தூர் மக்கள் தவிப்பு

Added : நவ 22, 2022 | |
Advertisement
அன்னுார்:குன்னத்துாரில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.அன்னுார்-கோவை சாலையில் உள்ள குன்னத்துாரில் இருந்து ஊருக்குள் செல்லும் பாதையில் சாலையோரத்தில், 250 அடி துாரத்துக்கு கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இங்கே ஊராட்சி நுாலகம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், மாகாளியம்மன் கோவில்
 சாலையில் தேங்கும் கழிவுநீர்:  குன்னத்தூர் மக்கள் தவிப்பு

அன்னுார்:குன்னத்துாரில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அன்னுார்-கோவை சாலையில் உள்ள குன்னத்துாரில் இருந்து ஊருக்குள் செல்லும் பாதையில் சாலையோரத்தில், 250 அடி துாரத்துக்கு கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இங்கே ஊராட்சி நுாலகம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், மாகாளியம்மன் கோவில் மற்றும் கடைகள் உள்ளன. பஸ் ஸ்டாப் மிக அருகில் உள்ளது. இங்கு கழிவு நீர், 250 அடி துாரத்துக்கு சாலையில் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது; கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இந்த பாதையில் செல்லும் வாகனங்கள் கழிவு நீரை இறைத்து செல்கின்றன.

இதுகுறித்து குன்னத்துார் ஊராட்சி அலுவலகத்திலும், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது பல இடங்களில் காய்ச்சல் பரவி வருகிறது. சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீரால் இங்கும் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X