மின் கம்பிகளை உரசும் மரக்கிளைகள் அகற்றம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வரும் மழைக் காலத்தை முன்னிட்டு, ஆபத்தாகவும், மின் கம்பங்கள் அருகிலும் உள்ள மரக்கிளைகளை வெட்டி, பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.எட்டாவது வார்டுக்கு உட்பட்ட பிரியா நகர், கணபதி நகர் விரிவு, ஸ்ரீவாரி நகர், திருமலை நகர் ஆகிய பகுதிகளில், தெருவில், மின் கம்பியை உரசியபடி செல்லும் மரக்கிளைகளால், மழைக்
 மின் கம்பிகளை உரசும் மரக்கிளைகள் அகற்றம்

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வரும் மழைக் காலத்தை முன்னிட்டு, ஆபத்தாகவும், மின் கம்பங்கள் அருகிலும் உள்ள மரக்கிளைகளை வெட்டி, பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

எட்டாவது வார்டுக்கு உட்பட்ட பிரியா நகர், கணபதி நகர் விரிவு, ஸ்ரீவாரி நகர், திருமலை நகர் ஆகிய பகுதிகளில், தெருவில், மின் கம்பியை உரசியபடி செல்லும் மரக்கிளைகளால், மழைக் காலத்தில், மின் தடை மற்றும் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

இது குறித்து, எட்டாவது வார்டு கவுன்சிலர் குமரவேல், நகராட்சி தலைவர் மற்றும் ஆணையருக்கு புகார் கடிதம் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, மின் வாரிய ஊழியர்கள், நகராட்சி பணியாளர்கள்இணைந்து, நேற்று சாலை ஓரத்தில், மின் கம்பங்களை ஒட்டியபடி உள்ள மரக்கிளைகளை அகற்றினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X